"தேங்க்ஸ் தமிழ் மக்களே"... ரசிகர்களுக்கு.. மனமார்ந்த நன்றி தெரிவித்த.. "மஞ்சும்மல் பாய்ஸ்" தீபக்!

Mar 06, 2024,04:32 PM IST

சென்னை: மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் சுதீஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த தீபக் தனது நடிப்பை ஆதரித்து பாராட்டும் தமிழ் ரசிகர்களுக்கு தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.


கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்குவாட், புலி முருகன் ஆகிய படங்கள் மலையாளத்தில் வெளியாகி தமிழிலும் மிகப்பெரிய வரவேற்பு வசூலில் சாதனை படைத்தது. அதேபோல சமீபத்தில் வெளியான  மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் மொழியைத் தாண்டி மிகப்பெரிய வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.  இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய ஹிட் கொடுத்துள்ளது.


கேரளாவைச் சேர்ந்த நண்பர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும்போது அங்குள்ள குணா குகையை காணச் செல்வர். குணா படத்தில் இடம்பெறும் குணா குகையை மையமாகக் கொண்டு அதில் விழும் தனது நண்பனை எப்படி மீட்கிறார் என்பதை  பரபரப்பான கதைகளத்துடன் மனதை பதபதைக்கும் காட்சிகளுடன் இப்படத்தில் நடித்த நாயகர்களின் எதார்த்த நடிப்பு தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது. 




இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளில் மீட்கப்பட்ட தனது நண்பர் குகையில் இருந்து வெளிவரும் போது "என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும் உந்தன் மேனி தாங்காது செந்தேனே".. என்ற குணா படத்தின் பாடல்  வரிகள் ஒலிப்பது இப்படத்திற்கு பிளஸ் என்றே சொல்லலாம்.  அதுதான் தமிழ்நாட்டு ரசிகர்களையும் இப்படத்தின் பக்கம் ஈர்த்துக் கொண்டு போய் விட்டது. 


உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட இப்படத்தை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படம் ஒரே இரவில் சென்சேஷனலாக மாறிவிட்டது என சிலருக்கு தோன்றலாம். ஆனால் இந்தபடத்தில் பணியாற்றிய படக் குழுவினர் ஒவ்வொருவரும் வெற்றிக்காக நீண்ட காலம் சினிமா துறையில் போராடி உள்ளனர். அந்த வகையில் சுதீஷ் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் நடிகர் தீபக் ரசிகர் மத்தியில் மிகப் பிரபலமாக பேசப்பட்டார்.


மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் சுதீஷ்  கதாபாத்திரத்தில் நடித்த தீபக் தனது சினிமா பயணத்தை 14 வருடங்களுக்கு முன்பு மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் படம் மூலம்  தொடங்கினார். இதன் பின்னர் தட்டத்தின் மறையத்து, தீரா, ரேக்ஷாதிகாரி, பைஜு, கேப்டன், மற்றும் கண்ணூர் ஸ்குவாட், போன்ற பல ஹிட் படங்களில் முக்கியமான ரோலில்  நடித்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த கதாபாத்திரத்திற்காக அபாரமான அன்பையும், தமிழ் ரசிகர்களின் பாராட்டையும், பெற்றுள்ளேன். இயக்குனர் சிதம்பரத்தின் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு சுதீஷ் என்ற கதாபாத்திரத்தில் தான் பொருத்தமாக இருப்பேன் என தேர்வு செய்யப்பட்டதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். மேலும்  இயக்குனரும், பார்வையாளர்களும், குறிப்பாக தமிழ் பார்வையாளர்களும் தனது நடிப்பை ஆதரித்து பாராட்டுவதற்கு தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர் தீபக் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

அதிகம் பார்க்கும் செய்திகள்