கோவில் உண்டியலை உடைத்து.. பணத்தைப் பகிர்ந்து கொண்டு.. காதல் வளர்த்த இளம் ஜோடிகள்!

Feb 07, 2025,11:16 AM IST

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்து ஜாலியாக காதலை வளர்த்து வந்த ஜோடியை போலீஸார் வலை வீசி தேடி வருகிறார்கள்.


90 கிட்ஸ் காலகட்டத்தில் காதல் வந்துவிட்டால் அனைத்தும் பறந்து போகும் என்பார்கள்‌. அதாவது காதலுக்கு உணவு இருப்பிடம், பணம் அந்தஸ்து, ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் தன்னிலை மறந்து உண்மையான காதலை வெளிப்படுத்தி காதல் செய்து வந்தனர். இதற்காக பெற்றோர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்புகள் நிலவினாலும் கூட அதை எல்லாம் சமாளித்து உண்மை காதலை நிலைநாட்டி வந்தனர்.ஆனால் தற்போது உள்ள நிலைமையே மாறிவிட்டது.


2கே கிட்ஸ் காலம் என்பதற்கு  ஏற்றாற்போல் எல்லாமே மாற்றத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அதில் காதலுக்கும் விதிவிலக்கா என்ன..? அப்போதெல்லாம் காதலி கைகூடாவிட்டால் காதலித்த பெண்ணை மட்டுமே நினைத்துக் கொண்டு,  தாடி வளர்த்து சாப்பிடாமல் தன்னைத்தானே வருத்திக் கொள்வார்கள். இப்பொழுது காதலி கை கூடாவிட்டாலும்  காதலியை நினைத்து வருந்தும் காலமெல்லாம் மலையேறிப் போய் அடுத்தடுத்து என்று பயணிக்கத் தொடங்கி வருகின்றனர் இன்றைய காதலர்கள்.




அப்படியே காதல் செய்தாலும் காதலுக்கும் கௌரவம் அந்தஸ்து உயர்ந்துள்ளது. ஏனெனில் நல்ல வேலை, நல்ல வசதி, நல்ல படிப்பு, என்பதை பார்த்து தான் இன்று காதலே வருகிறது. அதாவது காதலிக்கு ஏற்ற வசதிகளை காதலன் செய்தாலே போதும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்காக காதலர்கள் எந்த எல்லைக்கும் போய் தன்னுடைய காதலை நிரூபித்து கரம் பிடித்து வருகின்றனர். அதே வேளையில் காதலிக்காக பல்வேறு கிறுக்குத்தனங்களையும் செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட கிறுக்குத்தனமான செயல் காதலர் தின வாரம் தொடங்கியுள்ள தற்போது அரங்கேறி உள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞர் தன்னுடைய காதலியின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக என்னவெல்லாம் வேலை செய்திருக்கிறார் தெரியுமா வாங்க பார்க்கலாம்.


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ சோலையப்பன் ஆலயத்தில் கோயில் காணிக்கைகளை செலுத்துவதற்காக உண்டியல் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இதனை நோட்டமிட்ட காதல் ஜோடி ஒன்று அதை ஆட்டையைப் போட முடிவு செய்தது. காதலன் கோவிலுக்குள் வந்து நின்று கொண்டா். வெளியே இருந்து காதலி சிக்னல் கொடுக்கிறார். அதன் பிறகு யாரும் இல்லாத நேரமாக பார்த்து லாபகரமாக உண்டியலை கழட்டி அலேக்காக தூக்கி செல்கிறார் காதலன்.  கோயிலின் பின்புறம் கொண்டு போய் உண்டியலை உடைத்து, காதலனும் காதலியும் பணத்தை எடுத்து ஹேண்ட் பேக்கிற்குள் போட்டுக் கொண்டனர். 


என்ன ஒரு புத்திசாலித்தனம்  பாருங்கள். கோயிலை சுற்றி யாரும் வருகிறார்களா என பார்த்து உண்டியலை திருடி சென்ற காதல் ஜோடி, கோயில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராக்களை பார்க்காம விட்டுட்டார்களே.. ஐயோ பாவம்.. இவர்கள் செய்த கள்ளத்தனம் அனைத்தும் கேமராவில் பதிவாகி இருந்தது. இதுக்குத்தான் சொல்வது அக்கம் பக்கம் பாருங்கடான்னு.. கேக்குதுகளா!


கோயில் நிர்வாகத்தினர் செஞ்சி காவல் நிலையத்தில் கோயில் உண்டியல் திருடு போன சம்பவம் தொடர்பாக புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி அதில் இருந்த காதல் ஜோடிகளை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.


காதல் நிறைவேற சாமி கிட்ட போன காலம் மலையேறி.. சாமி உண்டியலியே கை வைக்கும் லெவலுக்கு இம்ப்ரூவ் ஆகி விட்டார்கள் காதலர்கள் என்பதே சாமிக்கே ஷாக்காதான் இருக்கும்!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

news

விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

news

யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!

news

பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா

news

என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

news

இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

news

தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?

news

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

news

தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்