"F..".. கடுப்பான ஜான்.. "இப்பவே, இந்த நிமிஷமே.. பேசாதே".. அந்தோணிக்குப் பறந்த லெட்டர்!

Feb 25, 2024,05:33 PM IST

டெல்லி: தனது பாஸ் தன்னிடம் ஆபாசமாக பேசியதால் கடுப்பான ஊழியர், அடுத்த நொடியே ராஜினாமா கடிதத்தை அனுப்பி அதை ரெடிட் தளத்திலும் பகிர்ந்தார். அந்த ஊழியருக்கு ஆதரவாக தற்போது பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


கோபம் வருவதும், கோபத்தில் வார்த்தைகள் தடிப்பதும் பலருக்கும் பல நேரங்களில் நடப்பதுதான். கடும் கோபத்திலும் கூட நிதானமாக இருப்பவர்கள் மிக மிக அரிது. கோபம் வரும்போது பலர் தேவையில்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது அந்த சம்பவம் அறுவெறுப்பானதாக மாறி விடுகிறது. மனக் காயங்களையும் ஏற்படுத்தி விடுகிறது. 


வார்த்தைகளைக் கொட்டி விட்டு பிறகு அதற்காக வருந்துவோர் பலர் உண்டு. சே.. அந்த மாதிரி பேசியிருக்கக் கூடாது.. கொஞ்சம் நாக்கை அடக்கியிருக்கலாம்.. அவசரப்பட்டுட்டோமே என்று பலரும் பீல் பண்ணுவார்கள். சிலருக்கோ தாங்கள் பேசியது குறித்து வெட்கமோ, கூச்சமோ இருக்காது. சரியாதான் பேசினோம் என்று பிடிவாதமாக இருப்பார்கள்.




இந்த நிலையில்  ஜான் என்பவர் தனக்கு நேர்ந்த சம்பவத்தை ரெடிட் தளத்தில் பகிர்ந்து பலரையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள ரெடிட் பதிவில் இப்படிக் கூறியிருக்கிறார்.


"நான் ஒர்க் பிரம் ஹோம் செய்கிறேன். ஒரு கம்ப்யூட்டர் அக்ஸஸ் தொடர்பாக எனது பாஸைத் தொடர்பு கொண்டு உதவி கேட்டேன். அது அவரைக் கோபப்படுத்தி விட்டது. இதையெல்லாம் ப்ரீயாக இருக்கும் போது செய்திருக்கக் கூடாதா.. வேலை நேரத்தில்தான் செய்யணுமா என்று கோபமாக கேட்டார். அத்தோடு நின்றிருந்தால் பரவாயில்லை "f.. off " என்று அவர் சொன்னதும் எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. 


உடனே நான், இதை இலவசமாக செய்யவில்லை. எனது வேலையை ராஜினாமா செய்கிறேன்.. இந்த நொடியே.. மறுபடியும் போய் யாரிடமும் f..off  என்று சொல்லாதீர்கள் என்று கூறி விட்டேன் என்று கூறி தான் அனுப்பிய ராஜினாமா மெயிலையும் அவர் பகிர்ந்துள்ளார்.


அவர் அனுப்பிய மெயிலுக்கு இதுவரை பதில் வரவில்லையாம்.  இந்த பதிவுக்கு பலரும் வந்து கமெண்ட் கொடுத்துக் கொண்டுள்ளனர். அதில் ஒருவர், நீங்க இப்படி பதில் அனுப்பியிருக்கக் கூடாது ஜான்.. உங்களோ பீட்பேக்குக்கு நன்றி அந்தோணி.. உங்களோட அட்வைஸை பின்பற்ற முடிவு செய்திருக்கேன்.. f* பண்ணப் போறேன்.. அதையும் உடனே பண்ணப் போறேன் என்று கூறியிருக்க வேண்டும் என்று ரசாபாசமாக கமெண்ட் செய்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்