லக்னோ: ஆஸ்திரேலியா - இலங்கை இடையிலான உலகக் கோப்பைப் போட்டியில், ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா, தான் முதுகுப் பிடிப்புடன் விளையாடியதாக கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா - இலங்கை இடையே நேற்று லக்னோவில் உலகக் கோப்பைப் போட்டி நடைபெற்றது. முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்திருந்ததால் இந்தப் போட்டியில் வெல்வது அந்த அணிக்கு முக்கியமானதாக இருந்தது. இதனால் அதன் பவுலிங்கிலும், பேட்டிங்கிலும் ஒரு வெறி இருந்தது.
முதலில் பவுலிங் செய்த ஆஸ்திரேலியாவுக்கு அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா கை கொடுத்தார். சிறப்பாக பந்து வீசிய அவர் 4 விக்கெட்களை வீழ்த்தினார். அவரது அபாரமான பந்து வீச்சு காரணமாக இலங்கை அணி 209 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
8 ஓவர்கள் வீசிய அவர் 1 மெய்டன் ஓவர் போட்டு, 47 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். இந்த வெற்றியின் காரணமாக, ஆஸ்திரேலியாவின் சாம்பியன் கனவு மீண்டும் உயிர் பெற்றுள்ளது.
இந்த நிலையில் ஆடம் ஜம்பா, முதுகுப்பிடிப்புடன் நேற்றைய போட்டியில் விளையாடியது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவர் போட்டிக்குப் பின்னர் பேசுகையில், 2 நாட்களாக எனக்கு முதுகுப் பிடிப்பு இருந்து வருகிறது. இருப்பினும் அது எனது ஆட்டத் திறமைக்கு பாதிப்பைத் தரவில்லை. என்னால் அணிக்கு வெற்றி தேடித் தர முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
இலங்கைக்கு எதிரான போட்டியின்போது பந்து வீசியபோது முதுகுப் பிடிப்பு அதிகம் சிரமம் தரவில்லை. இதனால்தான் என்னால் நன்றாகப் பந்து வீச முடிந்தது என்றார் ஜம்பா.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக .. எம்.ஏ. பேபி தேர்வு!
தமிழ்நாட்டு மண்ணில் பிரதமர் மோடி உறுதி தர வேண்டும்.. ஊட்டியிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
நவீன பாம்பன் கடல் பாலம்.. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.. புதிய ரயிலுக்கும் பச்சைக் கொடி!
அமைச்சர் நிர்மலா சீதாராமனை நான் சந்திச்சேனா.. நாம் தமிழர் தலைவர் சீமான் திட்டவட்ட மறுப்பு!
Tamil Nadu rains.. இன்னும் 10 நாட்களுக்கு மழைதான்.. தமிழ்நாடு வெதர்மேன் ஹேப்பி நியூஸ்!
அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது பெரும் போராட்டம்.. வீதிகளில் இறங்கிய மக்கள்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!
{{comments.comment}}