டெல்லி: வேலைக்குப் போன இடத்தில் அவசரமாக டாய்லெட்டுக்குப் போன நபர், அதே அவசரத்தில் டாய்லெட்டை சரியாக பிளஷ் அவுட் செய்யத் தவறியதால் கை வரை வந்த வேலை வாய்ப்பை இழந்து விட்டார்.
வேலை கிடைப்பதற்கு முன்பே இப்படி அஜாக்கிரதையாக, பொறுப்பில்லாமல் "இருந்தால்", நாளை வேலை கிடைத்து விட்டால் இன்னும் மோசமாகத்தானே செயல்படுவார் என்று கருதிய அந்த நிறுவனம் அவருக்கு வேலை தருவதில்லை என்று முடிவெடுத்து விட்டதாம்.
இப்போது அந்த நபர் தனக்குக் கிடைக்கவிருந்த அட்டகாசமான வேலைவாய்ப்பை இழந்து விட்டோமே என்று ரெடிட் தளத்தில் புலம்பலுடன் பதிவிட்டுள்ளார். பலரும் வந்து அதில் உச்சு கொட்டி விட்டுப் போயுள்ளர்.. கூடவே தலையில் "குட்டு" வைத்து விட்டும் சென்றுள்ளனர். இன்டர்வியூ எல்லாம் நல்லபடியாக முடிந்து, வேலை கிடைத்து விடும் என்ற நிலை வந்த சமயத்தில், தனது கவனக்குறைவால் அது தவறி விட்டது என்றும் அவர் புலம்பியுள்ளார்.
இதுகுறித்து அந்த நபர் போட்டுள்ள பதிவில், எல்லாமே நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அனைத்துக் கேள்விகளுக்கும் சிறப்பாகவே பதிலளித்திருந்தேன். இன்டர்வியூ முடியப் போகும் நேரத்தில் காபி கொடுக்கப்பட்டது. அதைக் குடித்த பிறகு டாய்லெட் போக வேண்டும் போல இருந்தது. ஆபீஸ் வளாகத்தில் இருந்த டாய்லெட்டுக்குப் போனேன். அட்டகாசமான பாத்ரூம் அது. முதல் நாள் இரவு முழுக்க பார்ட்டி கொண்டாடியதால் நிறைய சாப்பிட வேறு செய்திருந்தேன். இப்போது காபியும் சேர்ந்து கொள்ள நீண்ட நேரம் டாய்லெட்டில் செலவிட்டேன், முழுமையாக ரிலீவ் ஆன மாதிரி இருந்தது. ஆனால் இன்டர்வியூ தொடர்பான சில வேலைகள் பாக்கி இருந்ததால் போன வேலையை முடித்து விட்டு வேகமாக எனது சிஸ்டத்தில் வந்து அமர்ந்தேன் என்று கூறியுள்ளார்.
அவர் போன கொஞ்ச நேரத்தில் ஒரு பெண் ஊழியர் (இரு பாலாரும் பயன்படுத்தும் யுனிசெக்ஸ் டாய்லெட் அது) டாய்லெட்டுக்குள் போயுள்ளார். போனவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.. சரியாக பிளஷ் அவுட் ஆகாமல் "பவுல்" நிரம்பிக் கிடந்ததைப் பார்த்து வாந்தி எடுக்காத குறையாக வேகமாக வெளியே வந்தார். வந்தவர் அலுவலக பொறுப்பாளரிடம் போய் புலம்பியுள்ளார். அவரும் வந்து பார்த்து விட்டு.. யார்டா அந்த "culprit" என்று யோசித்தபோது, இன்டர்வியூவுக்கு வந்த நம்மாளு மீது சந்தேகம் திரும்பியது.
நம்மாளும் தனது தவறை உணர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் பிளஷ் அவுட் செய்தபோது தண்ணீர் வந்த சப்தம் கேட்டது. பவுலிலும் கூட தண்ணீர் நிரம்பி இறங்குவது போல இருந்தது. சரி பிளஷ் அவுட் ஆகி விட்டது என்று நினைத்து வந்து விட்டேன். ஆனால் பிளஷ் அவுட் ஆகவில்லை. தண்ணீர் அப்படியே தேங்கி நின்று விட்டதை நான் அறியவில்லை. அந்த அலுவலகத்தில் நான் மட்டுமே புதியவன். எனவே எல்லோரும் என்னையே சந்தேகப்பட்டனர். நான் ஒன்றும் தெரியாதவன் போல இருக்க முற்பட்டேன். ஆனால் யாரும் நம்பவில்லை. அதேசமயம் யாரும் என்னிடம் கடிந்து கொள்ளவும் இல்லை, யாரும் ஒன்றும் சொல்லவில்லை.
இருப்பினும் என்னை இன்டர்வியூ செய்த பாஸ் அதன் பிறகு என்னிடம் சரியாக பேசவில்லை. உர்ரென்று இருந்தார். இன்டர்வியூ முடிந்த பிறகு பாலோ அப்புக்காக அவர்களைத் தொடர்பு கொண்டபோது அவர்கள் பதிலளிக்கவில்லை, சரி வேலை இல்லை என்பதை புரிந்து கொண்டேன் என்று கூறியுள்ளார் அவர். இந்த போஸ்ட் தற்போது வைரலாகியுள்ளது. பலரும் வந்து பரிதாபப்பட்டுள்ளனர்.. அதேசமயம், போன வேலையை ஒழுங்கா முடிக்க வேணாமா.. அரை குறையா வந்தா யார்தான் வேலை கொடுப்பாங்க என்று திட்டியுள்ளனர்.
இனிமே எங்கேயாச்சும் "வெளியில்" போனா.. "முடிஞ்ச" பிறகு.. நல்லா "உத்து"ப் பார்த்துட்டு.. ஒன்னுக்கு "ரெண்டு" தடவை.. கன்பர்ம் பண்ணிட்டு வெளியேல வாங்கப்பா.. இல்லாட்டி மானக்கேடா போயிரும் குமாரு!
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}