டில்லி : தென் மாநிலங்களில் மலையாள திரையுலகில் பாலியல் தொல்லைகள் அதிகரித்து வரும் விவகாரம் தான் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. ஆனால் வட மாநிலங்கள் பலவற்றில், குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருவதை பலரும் கவனித்திருக்க மாட்டார்கள்.
கொல்கத்தாவில் பெண் பயிற்சி டாக்டர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பளம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மற்ற மாநிலங்களில் இது கண்டனம் தெரிவித்ததுடன் கடந்து போகும் செய்தியானது. ஆனால் மேற்குவங்கத்தில் இன்னும் அந்த கொந்தளிப்பு அடங்கவில்லை. பாஜக சார்பில் நேற்று 12 மணி நேரம் பந்த், போராட்டம், போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி என ஊரே கலவரமாகி உள்ளது.
தூக்குல போடுவோம் - மமதா பானர்ஜி
எதிர்க்கட்சிகளின் போராட்டம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் கட்சியின் நிறுவன தினத்தை கொண்டாடிய மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, அடுத்த வாரம் துவங்க உள்ள சட்டசபை கூட்டத்தில், பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், இதற்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பாரா என தெரியவில்லை. அப்படி அவர் ஒப்புதல் அளிக்காவிட்டால் அவர் மசோதாவில் கையெழுத்து இடும் வரை கவர்னர் மாளிகை முன் போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
பாலியல் குற்றங்களை தடுக்க இப்படி ஒரு கடுமையான சட்டத்தை கொண்டு வர உள்ளதுடன், அடுத்த 10 நாட்களில் இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். கொல்கத்தா சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ள நிலையில் மம்தாவின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தேச விரோத கருத்துக்களுக்கு ஆயுள் தண்டனை - யோகி ஆதித்யநாத்
மேற்குவங்கத்தில் இப்படி ஒரு சட்டம் என்றால், உத்திர பிரதேசத்தில் சோஷியல் மீடியாக்களில் தேச விரேத படங்கள் அல்லது கருத்துக்களை பதிவிடுவோர் மீது ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். இந்த புதிய டிஜிட்டல் மீடியா கொள்கைக்கு உத்திர பிரதேச அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது. அரசுக்கு எதிரான தகவல்கள், அரசு திட்டங்கள் குறித்த போலி தகவல்கள் வெளியிடும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.
அதே சமயம் அரசின் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில், அரசு பணிகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் வகையிலும் சோஷியல் மீடியா போஸ்ட் பதிவிடுவோரை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு இருக்கும் சப்ஸ்கிரைபர்கள் மற்றும் ஃபாலோவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாதத்திற்கு ரூ.8 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கவும் யோகி ஆதித்யநாத் அரசு முடிவு செய்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு தான் மன் கி பாத் நிகழ்ச்சியில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்வோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என பிரதமர் மோடி பேசி இருந்தார். அவர் பேசிய அடுத்த 2 நாட்களிலேயே மேற்கு வங்கத்திலும், உத்திர பிரதேசத்திலும் சட்டங்களை கடுமையாக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
'இட்லி கடை' பிரியர்களே.. ஹேப்பி நியூஸ் .. அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறார் தனுஷ்!
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
{{comments.comment}}