டிரட்மில் வாக்கிங்.. கூடவே ஒரு பப்பி.. "சூப்பர் மோட்டிவேஷன்".. அசத்தும் மமதா பானர்ஜி!

May 08, 2023,10:15 AM IST

கொல்கத்தா:  டிரட்மில்லில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றைப் போட்டுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. அதில் என்ன விசேஷம் என்றால் ஒரு நாய்க்குட்டியையும் கையில் பிடித்தபடி அவர் டிரட்மில்லில் ஓடுகிறார்.


தலைவர்கள் என்ன செய்கிறார்களோ இல்லையோ அவ்வப்போது ஏதாவது ஒரு உடற்பயிற்சி வீடியோவைப் போட்டு விடுகிறார்கள். அவர்கள் அதைப் போட்ட அடுத்த நிமிடமே.. "இது உடலா இல்லை இரும்பா.. தலைவா" என்று நாடி நரம்பெல்லாம் முறுக்கேற கமெண்ட்டுகளைத் தட்டி விட்டு தடபுடலாக அதை வைரலாக்கி விடுவார்கள் தொண்டர் பெருமக்கள்.


இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும் இதுபோல ஒரு வீடியோவைப் போட்டுள்ளார். ஒரு டிரட்மில்லில் அவர் ஓடுவது போன்ற வீடியோ அது. அவர் ஓடுவதில் விசேஷம் இல்லை.. மாறாக அவரது கையில் ஒரு நாய்க்குட்டி இருக்கிறதே அதுதான் ஸ்பெஷல். 




இதுகுறித்து அவர் கூறுகையில், சில நேரம் நமக்கு எக்ஸ்ட்ரா மோடிவேஷன் தேவைப்படுகிறது என்று கேப்ஷன் கொடுத்துள்ளார் மமதா.  இந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து கொண்டுள்ளன. ஆனால் கமெண்ட் போடும் ஆப்ஷனை பூட்டி வைத்துள்ளார் மமதா பானர்ஜி.


டிரட்மில்லில் ஓடினாலும் கூட உடற்பயிற்சிக்கான உடையை அணியவில்லை மமதா. வழக்கம் போல தனது வெள்ளைச் சேலையைத்தான் அணிந்தபடி ஓடுகிறார்.


உடற்பயிற்சி மீது அக்கறை கொண்டவர் மமதா. உடற்பயிற்சி செய்யுங்கள் என்று பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லவது அவரது வழக்கம். 2019ம் ஆண்டு உடல்நல விழிப்புணர்வுக்காக அவர் 10 கிலோமீட்டர் தொலைவுக்கு ஜாகிங் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டினார் என்பது நினைவிருக்கலாம்.


மமதா பானர்ஜிக்கு தற்போது 68 வயதாகிறது. கடந்த  50 வருடமாக அரசியலில் இருந்து வருகிறார். முன்பு கம்யூனிஸ்டுகளை எதிர்த்துப் போராடினார்.. இப்போது பாஜகவுடன் மோதிக் கொண்டிருக்கிறார். கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜக வீழ்ந்தால் பெரும் மகிழ்ச்சி அடைவேன் என்று சமீபத்தில் மமதா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்