ரூ. 3.51 கோடியில் புனரமைக்கப்பட்ட மாமல்லபுரம் ஸ்ரீ சயன பெருமாள் திருக்கோவில்.. பிப்.1ல் குடமுழுக்கு

Jan 26, 2024,02:42 PM IST
சென்னை: தனியார் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட மாமல்லபுரம் ஸ்ரீ சயன பெருமாள் திருக்கோவிலில் பிப்ரவரி 1ம் தேதி குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறவுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ளது அருள்மிகு ஸ்தல சயனப்பெருமாள் திருக்கோயில். இது இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவிலாகும். 

ஸ்ரீமன் நாராயணன் தனது திருப்பாற்கடல் என்னும் பாம்பணையைத் துறந்து அர்ச்சாவதார நிலையில் தரையில் ஸ்தல சயனமாய் கிடந்த திருக்கோலத்தில் காட்சி தரும் திவ்ய தேசம் தான் இந்தத் திருக்கடல் மல்லை என்னும் மாமல்லபுரம். அந்த மாமல்லபுரத்தில் அமைந்துள்ள இக்கோயில்
பதினான்காம் நூற்றாண்டில் பராங்குச மன்னனால் கட்டப்பட்டது. 



இந்தக் கோயில் தென்னிந்திய கட்டடக் கலைக்குப் பெருமை சேர்க்கும் ஒன்றாக  விளங்குகிறது. இங்குள்ள கருங்கல் தூண்கள் கலை வடிவத்திற்குச் சான்றுகள். இந்த ஆலயம் 108 திவ்ய தேசங்களில் 63 வது திவ்ய தேசமாக மதிக்கப்படுகிறது. பூதத்தாழ்வார் அவதரித்த திருத்தலமாகவும் இது கருதப்படுகிறது.12 ஆழ்வார்களுக்கும் இங்கே தனித்தனி சன்னிதிகள் உண்டு. பூதத்தாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் ஆகியோரின் பாடல் பெற்ற தலம் இது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்கோவிலில் புரனமைப்பு மேற்கொள்ள தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. இதையடுத்து ஜி.கே ரியால்டர்ஸ் மற்றும் இமயம் குழுமம் நிறுவனம் இந்த பணியை ஏற்றுக் கொண்டது. அந்த நிறுவனத்தின் தலைவர் ஆர். ஜி குமார் ரூ. 3. 51 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு  பணிகளைச் செய்துள்ளார்.  ஆலயத்தின் உட்புறம் மற்றும் வெளிப்பிரகாரங்கள் புதுப்பிக்கப்பட்டு இந்தக் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 

இதையடுத்து வருகிற பிப்ரவரி ஒன்றாம் தேதி வியாழக்கிழமை, தை மாதம் 18ம் தேதி, காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் இந்தத் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறுகிறது. விழாவில், அமைச்சர்கள் துரைமுருகன், திரு தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.



பாராளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களும், இந்து சமய அறநிலைத்துறை முன்னணி அலுவலர்களும், ஆலய அறங்காவலர் குழுவினரும் கலந்து கொள்கிறார்கள்.

ஆலயத்தில் உற்சவமூர்த்தி ஸ்ரீ ஸ்தல சயனப் பெருமாள், ஸ்ரீ நில மங்கைத் தாயார், ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ பூதத்தாழ்வார், விமானங்கள் ,ராஜகோபுரம், த்வஜஸ்தம்பம்,  கருடாழ்வார், அனுமார் மற்றும் பரிவார சன்னிதிகளுக்கும் குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெறும். கும்பாபிஷேகத்திற்குப் பிறகு இந்த ஆலயத்தை முறைப்படி எதிர்காலத்தின் தொடர் பராமரிப்புக்காக இந்து சமய அறநிலைத்துறையிடம் ஆலயத்தைப் புனரமைப்பு செய்த நிறுவனங்களின் தலைவர் ஆர்.ஜி. குமார் ஒப்படைக்கிறார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்