டில்லி : மத்திய அரசு கொண்டு வர உள்ள நாடு முழுவதும் ஒரே மாதிரியான பென்ஷன் திட்டமான UPS ல் U என்ற எழுத்து எதை குறிக்கிறது என்பதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே புது அர்த்தம் ஒன்றை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான பென்ஷன் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்து விட்டது. குறைந்த பட்ச பென்ஷன், குடும்ப பென்ஷன், உறுதியான பென்ஷன் ஆகியவற்றை உறுதி செய்வதற்காக இந்த புதிய பென்ஷன் திட்டத்தை கொண்டு வர உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வர உள்ள UPS (Unified Pension scheme) குறித்து தன்னுடைய எக்ஸ் தள பதிவில் கருத்து தெரிவித்துள்ள மல்லிகார்ஜூன கார்கே, UPS என்பதில் U என்பதற்கு ஒரே மாதிரியான என்பது அர்த்தம் கிடையாது. இது மோடி அரசின் U-turn ஐ குறிக்கும் என தெரிவித்துள்ளார்.
ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு பிரதமரின் அதிகாரத் திமிரை விட மக்கள் அதிகாரம் மேலோங்கியுள்ளது. மூலதன ஆதாயம்/குறியீடு, வக்ஃப் மசோதாவை கூட்டு நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்புதல், ஒளிபரப்பு மசோதாவை திரும்பப் பெறுதல், பக்கவாட்டு நுழைவு திரும்பப் பெறுதல் ஆகியவை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இவற்றை நாம் உறுதி செய்யும் பொறுப்பு உள்ளது. இந்த அதிகார அரசிடம் இருந்து 140 கோடி இந்தியர்களையும் காப்பாற்றும் பொறுப்பும் நமக்கு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மல்லிகார்ஜூன கார்கேவின் இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள பாஜக செய்தி தொடர்பாளர் துஹின் சின்ஹா, எப்போது எல்லாம் தெலுங்கானாவிலும், கர்நாடகாவிலும் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறதோ அப்போது எல்லாம் நிதி பற்றாக்குறை தான். தினமும் காலையில் வந்து பொய்களை சொல்வதே காங்கிரசின் வேலையாக உள்ளது. அதை தவிர அவர்கள் வேறு ஒன்றும் செய்வது கிடையாது. பொது பென்ஷன் திட்டத்திற்கான பணிகள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக நடந்து வருகிறது. நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன் இந்த திட்டத்தை இறுதி செய்வதற்கு முன் 100 க்கும் அதிகமான ஆலோசனை கூட்டங்களை நடத்தி உள்ளார்.
தெலுங்கானா, கர்நாடகாவில் நிலவும் நிதி நிலையையும் கருத்தில் கொண்டு ஆலோசித்த பிறகே மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. தாங்கள் ஆட்சியில் இருந்த போது இருந்த நிலையை மறந்து விட்டு காங்கிரஸ் மிக அதீதமாக நினைத்துக் கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}