"யார் தலைவர்ங்கிறது பிரச்சினை இல்லை.. எதிர்க்கட்சிகள் ஒற்றுமை முக்கியம்".. காங்கிரஸ் திடீர் முடிவு!

Mar 02, 2023,02:05 PM IST
சென்னை: யார் தலைமையில் நாம் தேர்தலை சந்திக்கப் போகிறோம் என்பது இப்போது முக்கியமில்லை. யார் கூட்டணியின் தலைவர் என்பதும் முக்கியமில்லை. மாறாக, எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்து பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதுதான் இப்போது மிக மிக முக்கியம், அவசியம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கூறியுள்ளார்.



2024 லோக்சபா தேர்தலை சந்திப்பதற்கான முஸ்தீபுகளை முக்கியக் கட்சிகள் தொடங்கி விட்டன. எதிர்க்கட்சிகள் தரப்பில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்று பலரும் பாடுபட்டு வருகின்றனர். ஆனால் சில கட்சிகளுக்கு அதை ஏற்பதில் தயக்கம் உள்ளது. குறிப்பாக மமதா  பானர்ஜி, கே.சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் காங்கிரஸ் தலைமையின் கீழ் போட்டியிட தயக்கம் காட்டுகின்றனர்.



அதேபோல அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடிக் கட்சிக்கும் காங்கிரஸ் தலைமையை ஏற்பதில் தயக்கம் உள்ளது. இதற்கு முன்பு வரை  தனது தலைமையில்தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறி வரும். ஆனால் தற்போது அதன் நிலைப்பாட்டில் மாற்றம் தெரிகிறது. 

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி சென்னையில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார். இதற்காக சென்னை வந்த அவரிடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கூட்டணி தொடர்பாக கேள்வி எழுப்பினர். காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமையுமா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு கார்கே பதிலளிக்கையில்,  நாங்கள் பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவில்லை . யார் தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்றும் நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒற்றுமையாக, ஒருங்கிணைந்து பாஜகவை எதிர்க்கவே விரும்புகிறோம். ஒத்த கருத்துடைய எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக போராட வேண்டும். நமது கூட்டணியை 2024 தேர்தலை மனதில் கொண்டு வலிமைப்படுத்த வேண்டும். இதுதான் காங்கிரஸின் விருப்பம் என்றார் கார்கே.

கடந்த 2019 லோக்சபா தேர்தலின்போது தனது தலைமையில்தான் கூட்டணி அமைய வேண்டும் என்று காங்கிரஸ் பிடிவாதமாக இருந்தது. இதனால் காங்கிரஸ் கூட்டணியில் மமதா பானர்ஜி, கே.சந்திரசேகர ராவ் ஆகியோர் சேர மறுத்து விட்டனர். இதனால் கூட்டணி பலவீனமடைந்தது. 

ஆனால் இந்த முறை அந்தத் தவறு நடந்து விடக் கூடாது என்பதில் காங்கிரஸ் கட்சி கவனமாக இருப்பதாக தெரிகிறது.  நிதீஷ் குமார் தலைமையில் தேர்தலை சந்திக்கலாம் என்று பல்வேறு கட்சிகளும் கூறி வருகின்றன. இதற்கு காங்கிரஸும் சம்மதிக்கும் என்றே தெரிகிறது. இந்தப் பின்னணியில்தான் கார்கேவின் பேட்டி வந்து சேர்ந்துள்ளது.

ஒருவேளை காங்கிரஸ் அல்லாமல் வேறு  கட்சி தலைமையில் கூட்டணி அமைந்தாலும் கூட மமதா பானர்ஜி, சந்திரசேக ராவ், அரவிந்த்கெஜ்ரிவால் போன்றோர் கூட்டணியில் இணைவார்களா என்பதும் குழப்பமாக உள்ளது.  அதேபோல மாயாவதியையும் கூட்டணியில் சேர்ப்பது இயலாத காரியம். அகிலேஷ் யாதவ் நிலைப்பாடு தெரியவில்லை.

அதேசமயம், காங்கிரஸைத் தவிர்த்து விட்டு எந்தக் கூ��்டணி அமைந்தாலும் அது வெல்லாது. காங்கிரஸ் அல்லாத கூட்டணியும் வெல்லாது. தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியும் சரிப்பட்டு வராது. மூன்றாவது அணியும் சரிவராது.. இந்த சாதாரணக் கணக்கை அனைத்துக் கட்சிகளும் புரிந்து கொண்டால் வலுவான கூட்டணி காங்கிரஸ் தலைமையில் செயல்பட முடியும் என்று மு.க.ஸ்டாலின் பலமுறை திட்டவட்டமாக கூறியுள்ளார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்