மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில்.. ஜனாதிபதி முயிசு தலைமையிலான.. இந்திய எதிர்ப்புக் கட்சி வெற்றி!

Apr 22, 2024,06:41 PM IST
மாலே: இந்திய எதிர்ப்பு மற்றும் சீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து சர்ச்சைக்குள்ளான ஜனாதிபதி முகம்மது முயிசு தலைமையிலான மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதனால் ஜனாதிபதி முயிசுவின் நிலைப்பாடு இன்னும் உறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

93 தொகுதிகளை கொண்ட மாலத்தீவு நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது. அதில் 90 தொகுதிகளில் ஜனாதிபதியின் கட்சி போட்டியிட்டது. இதுவரை முடிவு அறிவிக்கப்பட்ட 86 தொகுதிகளில் 66 இடங்களை ஜனாதிபதி கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதாவது மூன்றில் இரண்டு பங்குக்கும் மேலான மெஜாரிட்டியை இக்கட்சி பெற்று விட்டது.

இந்த வெற்றியின் மூலமாக ஜனாதிபதி முயிசுவின் செயல்பாடுகளுக்கு மாலத்தீவு மக்கள் அங்கீகாரம் கொடுத்திருப்பதாக பார்க்கப்படுகிறது. அதேசமயம், இவரது வெற்றி இந்திய அரசுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தரும் வகையில் அமைந்துள்ளது.  கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சீன ஆதரவு நிலைப்பாட்டுக்கு மாறியுள்ளார் மாலத்தீவு ஜனாதிபதி. இந்திய எதிர்ப்பு நிலையையும் அவர் எடுத்துள்ளார்.



மாலத்தீவைப் பொறுத்தவரை ஜனாதிபதியின் முடிவுகளை நிறுத்தி வைக்கும் அதிகாரம் அந்த நாட்டு நாடாளுமன்றத்திற்கு உள்ளது. ஜனாதிபதியாக முயிசு இருந்தாலும் கூட அவரது கட்சி முந்தைய நாடாளுமன்றத்தில் சிறுபான்மை  பலத்துடன்தான் இருந்தது. இதனால் அவரால் பல முக்கிய முடிவுகளை எடுக்க முடியாத நிலை நிலவியது. இப்போது அவரது கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கிடைத்து விட்டதால் இனி அவர் தனது விருப்பப்படி செயல்பட முடியும். இது இந்தியாவுக்கு ஆபத்தாக பார்க்கப்படுகிறது.

இதுவரை மாலத்தீவு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கட்சியாக மாலத்தீவு ஜனநாயகக் கட்சி இருந்து வந்தது. இந்தக் கட்சிக்கு 41 உறுப்பினர்கள் இருந்தனர். முன்னாள் ஜனாதிபதி இப்ராகிம் முகம்மது சாலிஹு தலைமையிலான கட்சியாகும் இது. இந்தக் கட்சி இந்திய ஆதரவு நிலைப்பாடு கொண்டதாகும். இந்த தேர்தலில் இக்கட்சி மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது.

மாலத்தீவு தேர்தல் முடிவுகள் இந்திய உறவுகளில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை போகப் போகத்தான் பார்க்க வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்