தடுமாறி விழுந்த பாட்டி.. நசுங்கிப் போன கால்.. மலேசிய தமிழருக்கு 3 வார சிறைத் தண்டனை!

Mar 16, 2024,05:51 PM IST

சிங்கப்பூர்: மலேசியாவைச் சேர்ந்த 45 வயது தமிழர் ஓட்டிய பஸ் விபத்துக்குள்ளாகி, 74 வயது பெண்ணின் கால் நசுங்கியது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அந்த நபருக்கு 3 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


அந்த தமிழரின் பெயர் குணசீலன் சுப்ரமணியம்.  இவர் சிங்கப்பூரில் பஸ் டிரைவராக இருக்கிறார். சம்பவத்தன்று பஸ்ஸை ஒரு நிறுத்தத்தில் நிறுத்தி விட்டு பஸ்ஸை எடுத்துள்ளார்.  அப்போது 74 வயதான துமினா சபி என்ற பெண் கீழே இறங்கிக் கொண்டிருந்தார். பஸ் வேகமாக எடுக்கப்பட்டதால் தடுமாறிய அவர் கீழே விழுந்தார். அதில் அவரது கால் பலத்த சேதமடைந்தது. 




உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு இரு கால்களிலும் முழங்காலுக்குக் மேலே பலமாக சேதமடைந்திருந்ததால் அறுவைச் சிகிச்சை மூலம் கால்கள் அகற்றப்பட்டன. இந்த வழக்கில் கைது செய்யப்ட்ட சுப்ரமணியத்தின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. அடுத்த 2 ஆண்டுகளுக்கு அவர் உரிமம் பெறவும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 ஆண்டுகளுக்கு அவர் சிங்கப்பூரில் எந்த வாகனத்தையும் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் தற்போது அவருக்கு 3 வார சிறைத் தண்டையும் வழங்கப்பட்டுள்ளது. பணியின்போது அலட்சியமாக இருந்ததாகவும், செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்