மலேசியாவுக்கும் இனி விசா இல்லாமல் போகலாம்.. டிசம்பர் 1ம் தேதி முதல்

Nov 27, 2023,07:04 PM IST

கோலாலம்பூர்:  இந்தியாவிலிருந்து மலேசியா செல்ல விரும்பும் இந்தியர்கள் இனிமேல் விசா இல்லாமல் அங்கு சுற்றுலா செல்லலாம் என்று மலேசிய அரசு அறிவித்துள்ளது. டிசம்பர் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.


மலேசியாவில் 30 நாட்கள் வரை தங்குத் திட்டமிடுவோர் இனிமேல் விசா இல்லாமலேயே அங்கு சென்று வர முடியும். இந்தியா மட்டுமல்லாமல் சீனாவுக்கும் இந்த சலுகையை அறிவித்துள்ளது மலேசியா. இந்தத் தகவலை பிரதமர் அன்வர் இப்ராகிம் அறிவித்துள்ளார்.


தனது மக்கள் நீதிக் கட்சி மாநாட்டின்போது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். மலேசியா பல்வேறு நாட்டவர்களால் விரும்பப்படும் ஒரு சுற்றுலா நாடாகும். இந்த ஆண்டு  ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் கிட்டத்தட்ட 1 கோடி பேர் மலேசியாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்தகு. இதில் சீனாவிலிருந்து வந்தோர் கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் ஆவர். இந்தியர்கள் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் ஆவர்.




இதுவே கடந்த 2019ம் ஆண்டு சீனாவிலிருந்து 10 லட்சம் பேரும், இந்தியாவிலிருந்து நான்கு லட்சம் பேரும் வந்திருந்தனர்.  கொரோனா காலத்திற்குப் பின்னர் இது வெகுவாக குறைந்து விட்டது. தற்போது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் விசா இல்லாமல் பயணிக்கும் சலுகையை மலேசியா அறிவித்துள்ளது.


ஏற்கனவே மலேசியாவின் பக்கத்து நாடான தாய்லாந்து இந்த சலுகையை இந்தியாவுக்கு அளித்துள்ளது. இப்போது மலேசியாவும் இதில் இணைந்துள்ளது. இதனால் இந்த நாடுகளுக்கு சீனா, இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

news

மாற்றுத்திறனாளிகள் குறித்த சர்ச்சை பேச்சு...வருத்தம் தெரிவித்த அமைச்சர் துரைமுருகன்

news

காங்கிரஸ் கம்யூனிஸ்ட்டை கண்டித்து.. தீர்மானங்களை கொண்டு வாங்க பார்ப்போம்..எடப்பாடி பழனிச்சாமி சவால்

news

அமித்ஷா பிரஸ்மீட் மேடையில் திடீர் Change.. டிஜிட்டல் பேனரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெயர் நீக்கம்

news

திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கம்... புதிதாக திருச்சி சிவா நியமனம்!

news

அமித்ஷாவை சந்திக்கும் அதிமுக தலைவர்கள்.. தேமுதிகவுக்கு டைம் கொடுக்க மறுத்ததா பாஜக?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 11, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

கலக்கும் குட் பேட் அக்லி.. புஷ்பா பட இயக்குனர் சுகுமார் படத்தில் அஜித் நடிப்பாரா..?

news

Panguni Utthiram.. பங்குனி உத்திரம் இன்று.. 12ம் தேதி முழு நிலவு.. மிக மிக சிறப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்