பாஜகவை தீண்டத்தகாத கட்சியாக சொன்னவர்கள்.. கூட்டணிக்காக தவம் இருக்கிறார்கள்.. அண்ணாமலை அட்டாக்!

Mar 07, 2025,07:49 PM IST

கோயம்பத்தூர்: பாஜகவை தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி என்று கூறியவர்கள் இன்று கூட்டணிக்காக தவம் இருக்கிறார்கள் என்று அதிமுகவை மறைமுகமாக கடுமையாக சாடியுள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.


கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலையிடம், அதிமுக கூட்டணி தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறுகையில், பாஜக தீண்டத்தகாத கட்சி, பாஜக நோட்டா கட்சி, பாஜக வந்ததால்தான் தோற்றோம் என்று கூறியவர்கள் இன்று கூட்டணிக்காக தவம் இருக்கும் சூழலை உருவாக்கியுள்ளோம். இதற்காக பெருமைப்படுகிறோம்.  பாஜக இல்லாமல் தமிழ்நாடு அரசியல் இல்லை என்ற சூழலை உருவாக்கியுள்ளோம்.


கடந்த ஐந்து வருட கால நிகழ்வுகளைப் பாருங்கள்.  எங்களை எப்படியெல்லாம் விமர்சித்தனர். இன்று எங்களுக்காகக் காத்துள்ளனர். அந்த அளவுக்கு உழைத்திருக்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி வலிமையாக இருக்கும், வலிமையாகிக் கொண்டிருக்கிறது. சரியான நேரத்தில் கூட்டணி குறித்து முடிவெடுப்போம். மோடி இருக்கிறார், அமித்ஷா இருக்கிறார். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.




நாங்கள் தேசியக் கட்சி. எங்களை நம்பி வந்தவர்களை விட்டு விட முடியாது. தினகரன் போன்றவர்கள் கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கின்றனர். அவர்களுக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். இன்று பஸ்சில் ஏறுங்கள், காலையில் இறக்கி விட்டு விடுகிறோம் என்று சொல்ல முடியாது. எனவே கூட்டணி வலிமையாகிக் கொண்டிருக்கிறது என்று கூறினார் அண்ணாமலை.


சில நாட்களுக்கு முன்புதான் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, அதிமுக உள்பட யாருமே எங்களுக்கு எதிரி இல்லை என்று கூறியிருந்தார். அதேபோல முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், திமுக மட்டுமே தங்களுக்கு எதிரி என்று கூறியிருந்தார். இதனால் இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைக்கப் போவதாக செய்திகள் எழுந்தன.


அதேசமயம், அதிமுக தரப்பிலிருந்து பாஜகவை அணுகியதாகவும் கூறப்படுகிறது. அப்போது தினகரன், ஓபிஸ்ஸை தவிர்த்தால் கூட்டணி வைக்கலாம் என்று அதிமுக தரப்பிலிருந்து செய்தி ஏதேனும் போனதா என்று தெரியவில்லை. அப்படிப் போனதால்தான் இன்றைய பிரஸ்மீட்டில் அதிமுகவை கடுமையாக மறைமுகமாக அண்ணாமலை சாடினாரா என்றும் தெரியவில்லை. மேலும் தினகரன் உள்ளிட்டவர்களுக்கு நன்றி உடையவர்களாக இருப்போம் என்று அவர் கூறியது, அதிமுகவுக்கு விடுக்கப்பட்ட நேரடியான செய்தியாகவும் பார்க்கப்படுகிறது.


ஜெயக்குமார் பிரஸ் மீட்டில் இதற்கு ஏதாவது பதில் கிடைக்கும்.. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

news

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

news

நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்

news

தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!

news

தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!

news

எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்

news

தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்