சென்னை: தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து வருகிறது தமிழக வெற்றிக் கழகம். இதை உணர்ந்துதானோ என்னவோ அந்தக் கட்சியை ஆரம்பத்திலேயே நிலை குலைய வைக்க இரண்டு முக்கியக் கட்சிகள் மும்முரமாக களம் இறங்கியிருப்பதாக சொல்கிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகம் குறித்து அரசியல் கட்சிகளிடையே ஒரு விதமான பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதை வெளிப்படையாக யாரும் காட்டிக் கொள்ளாவிட்டாலும் கூட உள்ளுக்குள் ஒரு விதமான உதறல் இருப்பதாகவே சொல்கிறார்கள். காரணம் விஜய் யாரும் எதிர்பாராத வகையில் தனது செயல்பாடுகளில் படு உறுதியாக இருக்கிறாராம்.
கடுமையாக திட்டிப் பார்த்தார்கள், விமர்சித்தார்கள். சீமான் ஒரு படி மேலே போய் நடு ரோட்டில் நின்னா செத்துப் போய்ருவ என்றெல்லாம் கூட வார்த்தையை இறக்கிப் பார்த்தார். ஆனால் எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டு, அண்ணனுக்கு ஒரு மசால் தோசை என்று வடிவேலு சொல்வது, போல, சகோதரருக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள் என்று கூறி எல்லோர் மத்தியிலும் சீமானைக் காலி செய்து விட்டார் விஜய். அதேபோல திமுக தரப்பில் விஜய் குறித்து வைக்கப்படும் எந்த விமர்சனத்தையும் அந்தக் கட்சி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பிற கட்சிகளின் விமர்சனங்களையும் கூட அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
தொலைக்காட்சி விவாதங்களிலும் கூட அவர்கள் நிதானம் இழக்காமல் பேசுகிறார்கள். தங்களால் முடிந்தவரை புள்ளிவிவரங்களையும் எடுத்து வைக்கிறார்கள். இது பலரையும் கவனிக்க வைத்துள்ளது. இதுதான் பல முக்கியக் கட்சிகளுக்கு கிலி ஏற்படுத்தியுள்ளதாம். விஜய் வளர்ந்து விட்டால், அவரது நிலை ஸ்திரமாகி விட்டால் நமக்கு சிக்கலாகி விடும் என்று முக்கியக் கட்சிகள் பயப்படுகின்றனவாம்.
மக்கள் மனதில் தவெக
விஜய்யின் அரசியல் படு வித்தியாசமாக இருப்பது யாருக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ, மக்களுக்கு அது பிடித்திருப்பதாக ஒரு தகவல் முக்கியக் கட்சிகளுக்குக் கிடைத்துள்ளது. யாரையும் தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். எந்த விமர்சனமாக இருந்தாலும் ஆதாரப்பூர்வமாக, நாகரீகமாக, மென்மையாக இருக்க வேண்டும். நமது கொள்கைகளை மட்டும் மக்களிடம் சொல்லி மக்கள் ஆதரவைப் பெற வேண்டும். எல்லோருக்கும் பதிலுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கட்சியை அடி மட்ட அளவில் வளர்க்க முயலுங்கள். கொடிகளை ஏற்றுவதில் கவனம் செலுத்துங்கள். கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை விரைவுபடுத்துங்கள். வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களைச் சேர்க்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். இளைஞர்கள், பெண்களின் வாக்குகள் நமக்கு வர வேண்டும். அதற்கேற்ப செயல்படுங்கள் என்று ஆக்கப்பூர்வமான அறிவுரைகளை விஜய் கட்சியினருக்குக் கொடுத்துள்ளார். அதை அவர்களும் கரெக்டாக கடைப்பிடிக்கிறார்களாம். இதுதான் அனைத்துக் கட்சிகளுக்கும் அடி வயிற்றில் கலக்கத்தைக் கொடுத்துள்ளதாம்.
வழக்கமாக மக்கள் இதுவரை பார்த்து வந்த காட்சிகள் என்ன.. அந்தத் தலைவர் இந்தத் தலைவரை கேவலமாக பேசுவார்.. இந்தத் தலைவர் அந்தத் தலைவரை படு கேவலமாக பேசி பதிலடி கொடுப்பார்.. ஒன்றுமில்லாத விஷயங்களைப் பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருப்பார்கள்.. நெகட்டிவிட்டியை மட்டுமே அதிகம் பிடித்துக் கொள்வார்கள்.. அவர் செய்த தவறை இவர் குறை சொல்வார்.. இவர் செய்த குறையை அவர் சொல்வார்.. இதுதான் இந்த நிமிடம் வரை நடந்து கொண்டுள்ளது. இதை தினசரி டிவிகளில் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நமக்கு இந்த மாதிரி பாலிட்டிக்ஸே வேண்டாம்.. நம்மோட அணுகுமுறைகள் மக்கள் மனதைக் குளிர வைப்பதாக இருக்க வேண்டும்.
நாம் இவர்கள் அல்ல.. நாம் வேற மாதிரியானவர்கள் என்ற எண்ணத்த்தைத்தான் தற்போது தவெகவினர் மக்களின் மனதில் பதிய வைக்க முயற்சித்து வருகின்றனர். அது பலனும் கொடுக்க ஆரம்பித்திருப்பதாக சொல்கிறார்கள். பரவாயில்லையே, தவெகவினர் அசிங்கமாகவோ, அநாகரீகமாகவோ பேசுவதில்லையே.. வித்தியாசமா இருக்காங்களே என்ற எண்ணம் பரவத் தொடங்கி விட்டதாம். இந்த எண்ணம் மக்களிடம் ஆழமாக வேரூண்றி விட்டால் சிக்கல் என்பதுதான் முக்கியக் கட்சிகளின் கவலையாக உள்ளதாம்.
குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி
இந்த நிலையில் விஜய் தனது கடைசிப் படத்தின் ஷூட்டிங்கை முடித்து விட்டு வருவதற்குள் கட்சியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த 2 கட்சிகள் முயற்சியில் ஈடுபட்டுள்ளனவாம். முக்கியத் தலைவர்களை தம் பக்கம் இழுப்பது அதில் ஒன்று. தவெக தொடங்கப்பட்ட அடுத்த நாளே தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பில்லா ஜெகன் கட்சி மாறினார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் தவெகவில் மக்களிடையே நல்ல அறிமுகம் உள்ள பிரமுகர்கள் யார் என்ற லிஸ்ட் கணக்கெடுக்கப்படுகிறதாம். அவர்களை தங்களது கட்சிக்கு இழுக்க முயற்சியில் இரண்டு முக்கியக் கட்சிகள் இறங்கியுள்ளனவாம்.
அதேபோல கட்சிக்குள் யாரெல்லாம் பிரபலமாகிறார்களோ, அவர்கள் வெளியில் வர வர அவர்களை நம் கட்சிக்குள் இழுக்க முயற்சியுங்கள் என்றும் ஒரு உத்தரவு போயுள்ளதாம். இதன் முக்கிய நோக்கம் என்னவென்றால், தவெகவில் யாரும் பிரபலமானவர்களாக இருக்கக் கூடாது. அப்படி வந்தால் அவர்கள் நமது கட்சிக்குள் இருக்க வேண்டும். திறமையான நிர்வாகிகள் இல்லாமல் விஜய் தடுமாற வேண்டும். கட்சியினரைப் பாதுகாப்பதிலேயே அவரது கவனம் முழுவதும் போக வேண்டும்.இது நடந்தால் தவெக கலகலத்து விடும் என்பது அவர்களது திட்டமாகும். இதனால்தான் தனது கட்சியில் இணையக் காத்திருக்கும் பல முக்கியஸ்தர்களை சற்று பொறுங்கள் என்று கூறி விஜய் சேப்டி செய்து வைத்துள்ளாராம்.
புஸ்ஸி ஆனந்த்துக்குக் குறி
இதேபோல இன்னொரு முக்கியக் கட்சி, தவெக தலைவர் விஜய்யின் வலதுகரமாகவும், கட்சியின் பொதுச் செயலாளராகவும் உள்ள, விக்கிரவாண்டி மாநாட்டை சிறப்பாக நடத்தி அனைவரையும் மிரள வைத்தவருமான புஸ்ஸி ஆனந்த்தை குறி வைத்து களம் இறங்கியுள்ளதாம். அவரை எப்படியாவது நம் பக்கம் கொண்டு வந்து விட வேண்டும் என்ற முயற்சியில் அக்கட்சி இறங்கியுள்ளதாம். இதற்காக பல்வேறு முயற்சிகளில் அந்தக் கட்சி இறங்கியுள்ளதாம். புஸ்ஸி ஆனந்த்தின் பல்வேறு முக்கியத் தகவல்களை அக்கட்சி சேகரித்துக் கொண்டுள்ளதாம். அதில் ஏதாவது லூப் கிடைத்தால் அதை வைத்து புஸ்ஸி ஆனந்த்தை மடக்குவது என்பது அக்கட்சியின் திட்டமாகும்.
விரைவில் புஸ்ஸி ஆனந்த்துக்கு ஒரு நெருக்கடி வரும் என்றும் புதுச்சேரியிலிருந்து கிடைத்த தகவல் கூறுகிறது. அதை சமாளிக்கவும், சந்திக்கவும் புஸ்ஸி ஆனந்த்தும் தயாராக இ ருப்பதாகவும் அந்தத் தகவல் மேலும் கூறுகிறது. ஆனால் இதையெல்லாம் ஏற்கனவே நன்கு உணர்ந்துள்ளார் விஜய். தனக்கே இத்தனை நெருக்கடிகள் வந்துள்ளன. அப்படி இருக்கும்போது கட்சி நிர்வாகிகளுக்கு எப்படியெல்லாம் பிரச்சினை வரும் எனபதை அவர் உணராமல் இருப்பாரா என்ன.. எனவே கட்சி ஆரம்பித்தபோதே என்னென்ன பிரச்சினையெல்லாம் வரும் என்பதையும் லிஸ்ட் போட்டு வைத்து விட்டாராம் விஜய்.
விஜய் ரொம்ப கிளியரா இருக்கார்
கட்சி நிர்வாகிகளிடம் ஆரம்பத்திலேயே அவர் பல முக்கிய விஷயங்களைத் தெளிவாக பேசி விட்டாராம். எப்படியெல்லாம் உங்களுக்கு நெருக்கடிகள் வரும் என்பதையும் அவர் விளக்கி விட்டாராம். அதையெல்லாம் கேட்டுக் கொண்ட நிர்வாகிகள், உங்களை 2026 தேர்தலில் வெற்றி பெற வைத்து நமது கட்சியை ஆட்சிப் பீடத்தில் ஏற்றுவது மட்டும்தான் எங்களது நோக்கம். இடையில் எந்த பிரச்சினை வந்தாலும் நாங்கள் எங்களது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்போம் என்று கூறி விட்டார்களாம். இதனால்தான் விஜய் ஹேப்பியாக தனது கடைசிப் பட ஷூட்டிங்குக்கு கிளம்பிப் போயுள்ளாராம். திரும்பி வந்ததும் அடுத்தடுத்த அதிரடிகளில் அவர் இறங்குவார் என்று சொல்கிறார்கள்.
சரி , புஸ்ஸி ஆனந்த்தை குறி வைக்கும் கட்சிக்கு வெற்றி கிடைக்குமா என்று தவெகவினர் சிலரிடம் கேட்டபோது, அட போங்க சார், விஜய்யே கூப்பிட்டு நீங்க போங்க என்று சொன்னால் கூட புஸ்ஸி ஆனந்த் போக மாட்டார்.. அவரைப் போய் இழுக்கிறதாவது.. காமெடி பண்ணாதீங்க சார் என்று சொல்லிச் சிரித்தனர்.
ஒரு முடிவோடதான் இருக்காங்க போலயே!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நடிகை கஸ்தூரி.. சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார்.. நவம்பர் 29ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு
F... you, Elon Musk.. அதிர வைத்த பிரேசில் அதிபரின் மனைவி.. அதுக்கு மஸ்க் சொன்ன பதிலைப் பாருங்க!
Kanguva.. கங்குவா குறித்து இப்படியா நெகட்டிவிட்டி பரப்புவது.. நடிகை ஜோதிகா ஆவேசம்
EXCLUSIVE: புஸ்ஸி ஆனந்துக்கு குறி வைக்கும் முக்கிய கட்சி.. தவெகவை பிளவுபடுத்த முயலும் 2 கட்சிகள்!
தனுசு ராசிக்காரர்களே.. லாபம் பெருகும் நாள் இது.. சிம்மம் மறதி.. கன்னி ஈகை!
முன்னாள் நடிகை, மாஜி பாஜக எம்பி.. நவ்னீத் ராணா மீது சேர் வீசி தாக்குதல்.. மகாராஷ்டிராவில் பரபரப்பு
நவம்பர் 17 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
தனுஷ் தனிப்பட்ட வெறுப்பால் என்னை பழிவாங்குகிறார் ..நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு!
Nayanthara: வாழு...வாழ விடு.. தனுஷ் வீடியோவை வைத்தே அவருக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்!
{{comments.comment}}