சென்னை: சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் நான் பேசியது மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தியிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் என்று மகாவிஷ்ணு தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மகாவிஷ்ணு என்பவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அவரது பேச்சு மூட நம்பிக்கையை ஊக்கப்படுத்துவது போல உள்ளதாக கூறி தமிழ் ஆசிரியரான பார்வை மாற்றுத்திறனாளி சங்கர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து சங்கருடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டார் மகாவிஷ்ணு. இது மேலும் சர்ச்சையானது.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து சர்ச்சைக்கு இடமான 2 அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களையும் பணியிடம் மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவிட்டது. அதேபோல் மகாவிஷ்ணு விவகாரம் குறித்து விசாரிக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. மறுபக்கம் மகாவிஷ்ணு மீது போலீஸில் புகார்கள் குவிந்தன. அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை அடுத்து ஜாமீன் கோரி மகாவிஷ்ணு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் நோக்கில் தான் பேசவில்லை எனவும், தனது பேச்சு அவர்களை புண்படுத்தியிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும், தனது பேச்சு எடிட் செய்யப்பட்டு யூ டியூபில் வெளியிடப்பட்டதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு முதலாவது கூடுதல் நீதிபதி ஜெ.சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக பதிலளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து மனுவிற்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணை அக்டோபர் 3ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சிங்கம்-கழுகு கூட்டணியா?.. சிலாகிக்கும் நா.த.க.. சீமான் சொன்ன பதில்.. ரஜினியுடன் சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
{{comments.comment}}