மாணவிகளிடையே ஆபாசமாக பேசிய மகாவிஷ்ணுவைக் கைது செய்ய வேண்டும்.. மாணவர்கள் போராட்டம்

Sep 06, 2024,11:28 AM IST

சென்னை: அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் மூடநம்பிக்கை குறித்து சர்ச்சை உரை நிகழ்த்திய மகாவிஷ்ணு என்பவருக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. அந்த நபர் மாணவிகளிடையே ஆபாசமாக பேசியதாக கூறி இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


சென்னை அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மூன்று நாட்களுக்கு முன்னதாக ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் கல்வி சார்ந்த சொற்பொழிவு ஆற்ற பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. 




ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு என்பவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவருக்கு என்சிசி மாணவியரின் அணிவகுப்பு மரியாதையெல்லாம் கொடுத்து தடபுடலாக கூட்டிப் போயுள்ளனர். அங்கு பேசிய இவர், முன்பிறவி பாவ புண்ணியம், மறு ஜென்மம் என மாணவிகள் மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இவரின் பேச்சு இணையத்தில் வைரலாகி பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் இவர் மாணவிகளிடையே ஆபாசமாக பேசியதாக கூறி இன்று அசோக் நகர் பள்ளி முன்பு இந்திய மாணவர் சங்கத்தின்  சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், தியானத்தின் மூலம் மாணவிகள் தங்களது மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். தியானம் மூலம் இதைச் செய்ய முடியும். யாராவது நம் முன்பு வந்து நிர்வாணமாக நின்றால் கூட உங்களால் உங்களை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். நானே கூட அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன் என்றெல்லாம் ஆபாசமாக பேசியுள்ளார். அவர் மீது பாலியல் வன்கொடுமைச் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோபாவேசமாகக் கூறினர்.


இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை இதுதொடர்பாக தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது தொடர்பாக   அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர், முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்விக்கு தொடர்பில்லாத எந்த  நிகழ்ச்சிகளையும் அரசு அனுமதியின்றி பள்ளிகளில் நடத்தக் கூடாது எனவும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாம்பன் பாலத்தை திறந்து வைக்க நாளை வருகிறார்.. பிரதமர் மோடி..பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

news

தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

இலங்கையில் பிரதமர் மோடி.. ஜனாதிபதி மாளிகையில் அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்பு..!

news

நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

தொடர் குறைவில் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!

news

தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்