முன்னாள் நடிகை, மாஜி பாஜக எம்பி.. நவ்னீத் ராணா மீது சேர் வீசி தாக்குதல்.. மகாராஷ்டிராவில் பரபரப்பு

Nov 17, 2024,10:26 AM IST

அம்ராவதி, மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநில முன்னாள் பாஜக எம்.பியும், முன்னாள் நடிகையுமான நவ்னீத் ராணா மீது இருக்கைகளை வீசி தாக்குதல் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் கருணாஸுக்கு ஜோடியாக நடித்தவர் நவ்னீத். தமிழில் சில படங்களில் நடித்த அவர் பின்னர் நடிப்பிலிருந்து விலகி விட்டார். அரசியலுக்கு மாறினார். எம்.பியாக இருந்தவர் நவ்னீத் ராணா. பாஜகவில் செயல்பட்டு வரும் அவரது பேச்சுக்கள் பலமுறை சர்ச்சையாகியுள்ளன.


இந்த நிலையில் மகாராஷ்டிராவில் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் நவ்னீத். அம்ராவதியில் நேற்று இரவு நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியபோது திடீரென ஒரு கும்பல் உள்ளே புகுந்து அமளியில் ஈடுபட்டது. அவர்களை அமைதிப்படுத்த முயன்றார் நவ்னீத். ஒரு கட்டத்தில் அவர்களுக்கு அருகே சென்று வெளியே போங்கள் என்று சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து கோபமடைந்த அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்த சேர்களை தூக்கி நவ்னீத்தை நோக்கி வீசினர்.




உடனடியாக காவல்துறையினரும், பாஜகவினரும் அரண் அமைத்து நவ்னீத்தை காப்பாற்றி அங்கிருந்து அகற்றினர். இந்த சம்பவம் காரணமாக அந்த இடமே போர்க்களம் போல மாறிக் காணப்பட்டது. அங்கிருந்து கிளம்பிய நவ்னீத் நேராக காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார். கலாட்டா செய்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். போலீஸார் இதுதொடர்பாக ஒரு புகாரைப் பதிவு செய்துள்ளனர். சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீஸ் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


இதுகுறித்து நவ்னீத் கூறுகையில், நாங்கள் அமைதியான முறையில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தோம். நான் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென சிலர் ஆபாசமாக கூச்சலிட்டனர். சத்தம் போட்டனர், கலாட்டாவில் இறங்கினர். அவர்கள் என்னைப் பற்றி ஆபாசமாக பேசியதால் அவர்களை அங்கிருந்து போகுமாறு கட்சித் தொண்டர்கள் கூறினர். நானும் கூறினேன். ஆனால் அவர்கள் சேர்களை தூக்கி வீசி தாக்குதலில் இறங்கி விட்டனர் என்றார்.


கடந்த 2019 முதல் 2014 வரை அம்ராவதி லோக்சபா தொகுதி உறுப்பினராக இருந்தவர்தான் நவ்னீத். அப்போது அவர் சுயேச்சை எம்.பியாக இருந்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் அவர் பாஜகவில் இணைந்தார். அதன் பின்னர் பாஜக வேட்பாளராக அம்ராவதி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இவரது கணவர் ரவி ராணா, மகாராஷ்டிர மாநில எம்எல்ஏ ஆவார். முன்பு சரத் பவார் கட்சி எம்எல்ஏவாக இருந்தார். 


நவ்னீத்தும், ரவி ராணாவும் சர்ச்சைகளுக்குப் புதியவர்கள் அல்ல. கடந்த 2022ம் ஆண்டு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வீட்டு முன்பு ஹனுமான் சாலிசா பாடுவோம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர். அதேபோல ஹைதராபாத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அக்பருதீன் ஓவைசியின் ஒரு பேச்சை மேற்கோள் காட்டி, முஸ்லீம்களை மிரட்டும் தொணியில் பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.


அதேபோல அப்போது ஹைதராபாத் லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மாதவிலதா வெற்றி பெற்றால், ஹைதராபாத் நகர் பாகிஸ்தானாக மாறுவதிலிருந்து காப்பாற்றுவார் என்றும் கூறி சர்ச்சையைக் கிளப்பினார்.  அந்தத் தேர்தலில் மாதவியும் தோற்றுப் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

news

பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்

news

தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா‌..?

news

மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு

news

சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி

news

பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

news

அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

news

அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்