மும்பை: மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று காலை தொடங்கிய சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் ஆர்வத்துடன் தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 9.7 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 4,139 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். வாக்காளர்கள் ஓட்டுப்போட ஏதுவாக 1 லட்சத்து 186 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு ஆளும் கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் நேருக்கு நேர் போட்டியிடுகின்றனர்.
அதேபோல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் 43 தொகுதிகளில் கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. மீதமுள்ள 38 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை ஆறு மணி வரை நடைபெறுகிறது. 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மக்கள் வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். மகாராஷ்டிராவில் காலை 9 மணி நிலவரப்படி 6.61% வாக்குகள் பதிவாகி உள்ளன. அதேபோல் ஜார்க்கண்ட் 2-வது கட்ட தேர்தலில் காலை 9 மணி நிலவரம் படி 12.71% வாக்குகள் பதிவாகி உள்ளன.
மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி, மகள் சாரா ஆகியோர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். அதேபோல் மும்பை ராஜ் பவனில் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் தனது வாக்கினை செலுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}