வித்தியாச நாயகன் விஜய் சேதுபதியின் மகாராஜா.. 2000 ஸ்கிரீன்களில் இன்று மெகா ரிலீஸ்!

Jun 14, 2024,03:05 PM IST

சென்னை: விஜயசேதுபதியின் 50வது படமான மகாராஜா தமிழ்நாட்டில் 450, மற்ற மாநிலங்களில் 750, வெளிநாடுகளில் 800 என மொத்தம் 2000 ஸ்கிரீன்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.


மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள  திரைப்படம் தான் மகாராஜா. இது விஜய் சேதுபதியின் 50வது திரைப்படம் என்பதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருக்கின்றனர். குரங்கு பொம்மை படத்தை இயக்கி நித்திலன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர்.




பான் இந்தியா படமாக  உருவாகியுள்ள இப்படத்தில், அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, விஜோத் சாகர், பி.எல். தேனப்பன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 450, மற்ற மாநிலங்களில் 750, வெளிநாடுகளில் 800 என மொத்தம் 2000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.




கதாநாயகன் விஜய் சேதுபதி ஒரு சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார், தனது மனைவி இறப்பிற்கு பின் தனது மகளை வளர்ந்து வரும் விஜய் சேதுபதியின் வாழ்க்கையில் மிகப்பெரிய சம்பவம் நடக்கிறது. இதையடுத்து காவல் நிலையம் சென்ற விஜய் சேதுபதி லட்சுமி காணாமல் போனதாக புகார் செய்கிறார்.யார் அந்த லட்சுமி, எதற்காக புகார் அளிக்கிறார். விஜய் சேதுபதியின் வாழ்க்கையில் நடந்தது என்ன? என்று பல கேள்விகளுக்கு இறுதியில் முடிவு  கூறப்பட்டிருக்கும் படம் தான் மகாராஜா.

சமீபத்திய செய்திகள்

news

Cyclone Fengal.. 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.. தேவையின்றி வெளியில் வராதீர்கள்

news

Cyclone Fengal to cross near Puducherry.. யாருக்கெல்லாம் நாளை ரெட் அலர்ட்?.. IMD Chennai Update

news

Cyclone Fengal வருது.. இருந்தாலும் தயாரா இருங்க.. அப்டேட் பண்றோம்.. ஷாக் கொடுத்த சென்னை பள்ளி!

news

கனமழை எதிரொலி.. அரும்பாக்கம், செயின்ட் தாமஸ் மெட்ரோ நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதைத் தவிருங்கள்!

news

ஃபெஞ்சல் புயல்.. 2024ம் ஆண்டில்.. வங்கக் கடலில் பிறந்த 3வது புயல்.. வட கிழக்கு பருவ காலத்தில் 2வது!

news

Cyclone Fengal.. வங்கக் கடல் ஆழ்ந்த காற்றழுத்தம்.. ஃபெஞ்சல் புயலாக மாறியது.. நாளை கரையைக் கடக்கும்

news

ஃபெஞ்சல் புயல்.. ரெட் அலர்ட் மாவட்டங்களில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர் தகவல்

news

Red alert: தமிழகத்தில் அதி கன மழை எச்சரிக்கை.. இன்றும் நாளையும் ரெட் அலர்ட் அறிவிப்பு

news

சென்னையில்.. இன்று மாலை முதல் ஞாயிறு காலை வரை மிக கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்

அதிகம் பார்க்கும் செய்திகள்