புரட்டாசி சனிக்கிழமையில் துவங்கும் மகாளய பட்சத்திற்கு அப்படி என்ன சிறப்பு?

Sep 30, 2023,01:06 PM IST

சென்னை : புரட்டாசி மாதம் என்பது பெருமாள் வழிபாட்டிற்குரிய மாதமாகும்.  புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை மேலும் சிறப்பானதாகும். புரட்டாசி மாதம் புதன் பகவானுக்குரி உரியது. புதனுக்குரிய அதிபதி மகாவிஷ்ணு. அதனாலேயே புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டிற்குரிய மாதமாக மாறியது. புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து, வேண்டியது அனைத்தும் நடக்கும். சகல விதமான நலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.


புரட்டாசி மாதத்தில் வரும் மற்றொரு சிறப்பு, முன்னோர்களை வழிபடுவதற்கு ஏற்ற மகாளய பட்சம். மகாளய பட்ச காலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால் முன்னோர்களின் அருள் முழுவதுமாக கிடைக்கும். இந்த ஆண்டு மகாளய பட்சம் கூடுதல் சிறப்பாக பெருமாளுக்குரிய புரட்டாசி சனிக்கிழமையில் துவங்கி, புரட்டாசி சனிக்கிழமையிலேயே நிறைவடைகிறது. மகாளய பட்சம் துவங்கும் செப்டம்பர் 30 ம் தேதியும் புரட்டாசி சனிக்கிழமையில் வருகிறது. மகாளய அமாவாசையும் புரட்டாசி சனிக்கிழமை அன்றே வருகிறது.


மகாளய பட்சம் புரட்டாசி சனிக்கிழமையில் துவங்குவதற்கு தனியான ஒரு சிறப்பு உள்ளது. இந்தியாவில் பித்ரு தர்ப்பணம் கொடுப்பதற்கு ஏற்ற புண்ணிய தலங்களில் மிக முக்கியமானது கயா. காசியிலும், கயாவிலும் இறந்த முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து வழிபட்டால் அவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். எத்தனை அடி கயாவை நோக்கி நாம் நடந்து செல்கிறோமோ அத்தனை தலைமுறையினருக்கும் பிரம்ம லோகத்தில் இடம் உண்டு சாஸ்திரங்கள் சொல்கின்றன. 


கயாவில் நாராயணனரை சாட்சியாக வைத்து பிண்டம் பிடித்து தர்ப்பணம் கொடுத்து விட்டால் அதற்கு பிறகு வேறு எங்கும், எப்போதும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என சொல்லப்படுகிறது. கயாவில் முன்னோர் தர்ப்பணம் கொடுத்து விட்டு, விஷ்ணு பாதத்தை வணங்கினால் அவர்களின் அத்தனை பாவங்களும் நீங்கி விடும் என்பது ஐதீகம். அதனால் பெருமாளுக்குரிய புரட்டாசி சனிக்கிழமையில் மகாளய பட்சம் துவங்குவது மிகவும் சிறப்பானதாகும்.


புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபட்டால் அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும். அதோடு குலதெய்வ அருளும் நமக்கு கிடைக்கும். புரட்டாசி சனிக்கிழமையில் மாவிளக்கு ஏற்றி என்ன வேண்டுதல் வைத்தாலும் அது அப்படியே நடக்கும் என்பது ஐதீகம்.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ.11.9 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

news

விஜய்க்கு கோபம் வருவதற்காக தான் அஜித்துக்கு வாழ்த்து கூறுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?: டாக்டர் தமிழிசை

news

Deepavali special.. மொறுமொறுன்னு.. சாப்பிட்டா விறுவிறுன்னு.. ரிப்பன் பூண்டு பக்கோடா!

news

தமிழ்நாட்டில் மழை.. தீபாவளியன்னிக்கு யாருக்கெல்லாம் கன மழை காத்திருக்கு.. லிஸ்ட்டைப் பாருங்க!

news

முத்திரை பதித்த பேரரசர்.. அரசியலின் முக்கிய அடையாளம்.. பசும்பொன் தேவருக்கு விஜய் புகழாரம்

news

டக்குன்னு அஜீத் பக்கம் திரும்பிய உதயநிதி ஸ்டாலின்.. கடகடவென பாலோ செய்த அமைச்சர்கள்!

news

Chennai Rains.. அண்ணாநகரை வச்சு செஞ்ச மழை.. 1 மணி நேரத்தில் 100 மி.மீ.. இது லிஸ்ட்லேயே இல்லையே!

news

Deepavali special sweet: செம டேஸ்ட்டு.. சூப்பர் ஸ்வீட்டு.. தீபாவளிக்கு முந்திரி கேக் செய்யலாமா?

news

ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கம் விலை: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்