சென்னை : ஒவ்வொரு மாதத்தில் வரும் அமாவாசை முன்னோர்களை வழிபடுவதற்காக ஒதுக்கப்பட்ட முக்கிய விரத நாட்களாகும். மற்ற மாதங்களில் வரும் அமாவாசையை விட தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை மிக முக்கியமானதாகும். அனைத்து அமாவாசைகளிலும் விரதம் இருந்து, முன்னோர்களை வழிபட முடியாவிட்டாலும் இந்த மூன்று அமாவாசைகளில் கண்டிப்பாக விரதம் இருந்து, முன்னோர்களை வழிபட வேண்டும்.
வருடத்தில் ஒரு அமாவாசை விரதம் கூட கடைபிடிக்க முடியாதவர்கள், முன்னோர்களை வழிபட மறந்தவர்கள், இதுவரை முன்னோர்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்ய தவறியவர்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது முன்னோர்களை நினைத்து வழிபட்டு, விரதம் இருக்க வேண்டும். இதற்காக தான் மகாய பட்சம் என 15 நாட்களை முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். புரட்டாசி மாத பெளர்ணமிக்கு பிறகு வரும் 15 நாட்களை மகாளய பட்சம் என்பார்கள். இந்த 15 நாட்களும் முன்னோர்களை வழிபட்டு, தர்ப்பணம், சிராத்தம் அளித்து, தானங்கள் வழங்கினால் முன்னோர்களின் அருள் நமக்கு கிடைக்கும். இதனால் பித்ரு தோஷம், பித்ரு சாபங்கள் நீங்கும். 15 நாட்களும் வழிபட முடியாதவர்கள் மகாளய பட்சத்தின் கடைசி நாளான மகாளய அமாவாசை அன்று கண்டிப்பாக விரதம் இருந்து முன்னோர்களை வழிபட வேண்டும்.
இந்த ஆண்டு மகாளய அமாவாசை அக்டோபர் 14 ம் தேதியான சனிக்கிழமை அமைந்துள்ளது. அதுவும் புரட்டாசி கடைசி சனிக்கிழமை மற்றும் 2023 ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்துடன் இணைந்து வருகிறது. கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமையில் மகாளய அமாவாசை வருகிறது. அதோடு ஜோதிட ரீதியாக 30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் தனது ஆட்சி வீடான கும்ப ராசியில் இருக்கும் போது மகாளய அமாவாசை வருகிறது. இந்த நாளில் சூரிய கிரகணமும் சேர்ந்து வருகிறது. இந்தியாவில் இரவு 08.30 மணி முதல் அக்டோபர் 15 ம் தேதி அதிகாலை 2.43 வரை கிரகணம் ஏற்படுகிறது.
கிரகணத்தன்று செய்யப்படும் தானங்கள், வழிபாடுகள் இரண்டு மடங்கு பலன்களை பெற்றுத் தரும். அதனால் இந்த நாளில் முன்னோர்களையும், சனி பகவானையும் வழிபட்டால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். இதனால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து, செல்வ வளமும் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.
மகாளய அமாவாசை அன்று காலையில் எழுந்து புனித நதிகளில் நீராட வேண்டும். அப்படி முடியாதவர்கள் வீட்டில் உள்ள தண்ணீரில் தீர்த்தம் கலந்து குளிக்க வேண்டும். சூரிய உதயமானதும் முன்னேரா்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். இந்த நாளில் நாம் கொடுக்கும் தர்ப்பணத்தை நம்முடைய பெயர் தெரிந்த, தெரியாத முன்னோர்களை அனைவரும் ஏற்றுக் கொள்வதாக ஐதீகம். தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் வீட்டிலேயே எள்ளும், தண்ணீரும் இறைத்து வழிபட வேண்டும். முன்னோர்களை வழிபட்ட பிறகு சூரிய பகவானை வழிபட்டு விட்டு வந்து, வீட்டில் உள்ள முன்னோர்கள் படத்திற்கு முன் விளக்கேற்றி வைக்க வேண்டும். அதற்கு பிறகே பூஜை அறையில் விளக்கேற்றி வழக்கமான பூஜைகளை செய்ய வேண்டும்.
பகலில் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகள், அமாவாசை சமையலுக்குரிய காய்கறிகள் கலந்து சமைத்து, காகத்திற்கு படைத்து, முன்னோர்களுக்கு படையிட்டு, பிறகு நாமும் சாப்பிடலாம். மாலையில் வீட்டில் முன்னோர்கள் நற்கதி அடைய வேண்டும் என விளக்கேற்றி வழிபட வேண்டும். மகாளய அமாவாசை அன்று யாராவது இரண்டு பேருக்காவது உணவளிக்க வேண்டும். போர்வை, ஆடை, விசிறி, செருப்பு, கருப்பு எள், உளுந்து, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை தானமாக அளிப்பது சிறப்பானதாகும். இவ்வாறு வழிபடுவதால் பித்ரு தோஷம், கால சர்ப்ப தோஷம், சனி தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் நீங்கும்.
மதுரையில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ.11.9 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
விஜய்க்கு கோபம் வருவதற்காக தான் அஜித்துக்கு வாழ்த்து கூறுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?: டாக்டர் தமிழிசை
Deepavali special.. மொறுமொறுன்னு.. சாப்பிட்டா விறுவிறுன்னு.. ரிப்பன் பூண்டு பக்கோடா!
தமிழ்நாட்டில் மழை.. தீபாவளியன்னிக்கு யாருக்கெல்லாம் கன மழை காத்திருக்கு.. லிஸ்ட்டைப் பாருங்க!
முத்திரை பதித்த பேரரசர்.. அரசியலின் முக்கிய அடையாளம்.. பசும்பொன் தேவருக்கு விஜய் புகழாரம்
டக்குன்னு அஜீத் பக்கம் திரும்பிய உதயநிதி ஸ்டாலின்.. கடகடவென பாலோ செய்த அமைச்சர்கள்!
Chennai Rains.. அண்ணாநகரை வச்சு செஞ்ச மழை.. 1 மணி நேரத்தில் 100 மி.மீ.. இது லிஸ்ட்லேயே இல்லையே!
Deepavali special sweet: செம டேஸ்ட்டு.. சூப்பர் ஸ்வீட்டு.. தீபாவளிக்கு முந்திரி கேக் செய்யலாமா?
ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கம் விலை: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}