எத்தனை கோடி வருடங்கள் தவமிருந்தாலும்
இத்தனை அழகாய் தோன்றிடும் பூமியில்
இறைவன் அருள் பெற்றால் மட்டுமே
பெண்ணாய் பிறக்க முடியும் !
தலைமுறையை சுமந்திடும் தாய்மையும் பெண்ணே!
இல்லத்தை காத்திடும் மங்கையும் பெண்ணே!
துன்பத்தை துடைத்திடும் நங்கையும் பெண்ணே!
பெண்கள்
சக்தி எல்லாம் ஒன்று திரட்டி
சரித்திரம் படைக்கும் சாதனை பூக்கள்!
கலகம் செய்யும் மானுடத்தில்
உலகம் செய்ய விரும்பும் உன்னத உள்ளங்கள்!
ஒளியாய்த் தங்களுக்குள்ளே
"தன்னம்பிக்கை" என்னும் ஒளியை
தாங்கியுள்ள தாரகைகள்
ஆசை கனவுகளுக்குப் பொட்டிட்டுப் பூச்சூடி
அழகு பார்க்கும் தேவதைகள்!
பேதை நிலையில் பேரின்பம் அடையவும்
பெதும்பை நிலையில் பெருமை பெறவும்
மங்கை பருவத்தில் மகிழ்ச்சியில் திளைக்கவும்
மடந்தை பருவத்தில் மனம் புரிந்து
அரிவை நிலையில் ஆனந்த குழந்தை பெற்று
தெரிவை நிலையில் தெளிவுடன் குடும்பத்தைக் காத்து
பேரிளம் பெண்ணாய் போற்றுதலுடன் வாழ்வதற்கு
பெண்களால் மட்டுமே இயலும்!
வானத்தின் அழகை அதன் நீல நிறம் வசப்படுத்தும்!
நிலவின் அழகை அதன் பாலொளி வசப்படுத்தும்!
தென்றல் காற்று நம் மேனியை வருடியே வசப்படுத்தும் !
இதற்கெல்லாம் மேலாக
பிறப்புக்களின் புனிதத்தை "பெண்மை"யே வசப்படுத்தும் !
பொறுமையில் சீதையாய், வீரத்தில் ஜான்சி ராணியாய்
வெற்றியில் வேலு நாச்சியாராய், கம்பீரத்தில் இந்திராவாய்
கற்பில் கண்ணகியாய், காவலில் கிரண் பேடியாய்
சாதனையில் கல்பனா சாவ்லாவாய், சமூக சேவையில் அன்னை தெரசாவாய்
தரணி போற்றும் தங்கப் பெண்ணாய்
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்
சாதிக்கத் துடிக்கும் சிங்கப்பெண்ணாய்
சரித்திரம் படைக்கும் புரட்சி பெண்ணாய்
இப்படி மனித வாழ்க்கையில்
பெண்களின் சாதனை மகத்தானது!
பெண்கள் தொடாத துறையும் இல்லை !
பெண்கள் செய்யாத சாதனைகளும் இல்லை !
பெண் என்பவள்
ஜனனத்தின் பிறப்பிடம்! தியாகத்தின் உறைவிடம்!
அன்பின் அடையாளம்! பண்பின் புகலிடம்!
பெண் என்பவள் விதையாக இருந்தால் மட்டுமே
ஆண் என்பவன் கனியாக கனிய முடியும்!
பெண் என்பவள்
தன்னை அதிகம் வெளிக்காட்டாத
வேராக இருந்தால் மட்டுமே
ஆண் என்பவன் உயரமாக வளர முடியும்
பெண் என்பவள்
பெற்றோர் சுட்டெடுத்த மண்!
கற்பொளி வீசுவதில் பொன்!
மழலை மேகங்கள் விளையாடும் விண்!
குடும்பத்தை தாங்கி நிற்பதில் தூண்!
தன் மக்களை காப்பதில் கண்!
இல்லற இன்பத்தின் தேன்!
இவளை மதியாத மனிதரெல்லாம் வீண்!
மங்கையராகப் பிறப்பதற்கே - நல்ல
மாதவம் செய்திட வேண்டுமம்மா என்ற வாக்கிற்கேற்ப
மகளாய் மகுடம் தரித்து
மருமகளாய் மறு வீடு புகுந்து
மனைவியாய் மணவாளன் கைகோர்த்து
மசக்கையாகி மறு பிறவி எடுத்து
மழலை மொழியில் மகிழ்ச்சி கண்டு
மங்காத அறிவொளியும் தந்து
மருமகளுக்கோ மருமகனுக்கோ
மற்றும் ஒரு தாயாகி
மனையை காத்து
மற்றவர் நலம் காத்து
மனம் தளராது
மடியும் வரை
மற்றவர்கள் மகிழ்ச்சியாக வாழ
மண்ணில் படைக்கப்பட்ட
மாமனிகளாம் மாதருக்கு
மா உலகமும் காத்திட
மாபெரும் சாதனைகள் படைத்திட
இந்த மகளிர் தின விழாவில்
மனதார வாழ்த்துகிறோம்
கவிதை: வி. ராஜேஸ்வரி, உதவியாளர், மதுரா கல்லுரி, மதுரை.
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
{{comments.comment}}