நெல்லை: நெல்லையில் இன்று மாலை நடைபெறும் இசை நிகழ்ச்சிக்காக வருகை தந்துள்ள இசைஞானி இளையராஜா பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
திருநெல்வேலி ரெட்டியார்பட்டி அருகே உள்ள முத்தூர் கிராம சாலையில் இன்று இசைஞானி இளையராஜாவின் இசை கச்சேரி நேரலை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. மாலை 6 மணிக்கு துவங்கும் இந்த இசை கச்சேரி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவுடன் இணைந்து 15க்கும் மேற்பட்ட பின்னணி பாடகர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
நெல்லையில் முதல் முறையாக இளையராஜாவின் இசை கச்சேரி நடைபெற உள்ளதால் இதுவரை 10,000 ரசிகர்கள் பங்கு பெற முன் அனுமதி சீட்டை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயத்தில் இளையராஜாவைக் காண திரளான ரசிகர்கள் கூடுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இதனால் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இளையராஜா பங்குபெறும் இந்த இசைக் கச்சேரி நிகழ்ச்சி திருநெல்வேலியில் குறுகலான பாதையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் இந்த இசை கச்சேரிக்கு வருபவர்கள் குறுகலான பாதை வழியில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தகவல் தெரிவித்துள்ளார்.
இசை நிகழ்ச்சிக்காக நெல்லை வருகை தந்துள்ள இசைஞானி இளையராஜா 1200 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட இளையராஜாவுக்கு சிறந்த மரியாதை அளிக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இப்பவே தலை தூக்கும் வெயில்.. இன்றும், நாளையும் அதிகபட்சமாக 2 முதல் 3 டிகிரி வரை உயர வாய்ப்பு
கிருஷ்ணகிரி அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. 3 ஆசிரியர்கள் அதிரடி கைது!
திருப்பரங்குன்றத்தை வைத்து.. திமுக ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்த முயல்கிறது பாஜக.. அமைச்சர் சேகர்பாபு
திருப்பரங்குன்றம் விவகாரம்.. முதல்வர் மென்மையாக இருக்கக் கூடாது.. செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
படகில் சென்று.. திரிவேணி சங்கமத்தில்.. 3 முறை புனித நீராடிய பிரதமர் நரேந்திர மோடி
அஜீத் ரசிகர்களே ரெடியா.. விடாமுயற்சி நாளை ரிலீஸ்.. சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி
144 தடை உத்தரவு வாபஸ்.. திருப்பரங்குன்றம் மலை கோவில், தர்காவுக்குச் செல்ல போலீஸ் அனுமதி!
சாம்சங் நிறுவனத்தில் மீண்டும் சர்ச்சை,3 தொழிலாளர்கள் சஸ்பெண்ட்..தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
ஓம் சரவணபவ.. வாழ்வில் வளம் பெற தை கிருத்திகை விரதம்.. பிப்ரவரி 6.. மறவாதீர்கள்!
{{comments.comment}}