சிவகங்கை: நாளிதழில் வந்த செய்தி வாயிலாக மாணவியின் சாதனையை அறிந்து தொடர்ந்து ஏழாவது ஆண்டாக அந்த மாணவியின் கல்விக்கு உதவி செய்யும் ஜானகி அம்மாள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
தற்போது உள்ள காலகட்டத்தில் மக்களிடையே பத்திரிக்கை, புத்தகங்கள் வாசிப்பு என்பது மிகவும் குறைந்து விட்டது. மாறாக வாட்ஸ் அப், youtube,இ மெயில், முகநூல் போன்றவற்றை பாலோ செய்து வருகின்றனர். ஆனால் அனைவரும் சோசியல் மீடியாவை மட்டுமே பார்ப்பதில்லை. ஒரு சிலரோ பத்திரிக்கை செய்திகள், புத்தகங்கள் போன்றவற்றை வாசிக்கும் பழக்கத்தையும் கொண்டுள்ளனர்.
அதன்படி, கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்பதாம் தேதி சிவகங்கையை சேர்ந்த மாணிக்கவாசகம் பள்ளியில் படிக்கும் மாணவி தனலட்சுமியின் சாதனையை பாராட்டி நாளிதழ் சார்பாக ரூபாய் 1000 பரிசுத் தொகை வழங்கப்பட்ட செய்தி வெளியானது. இச்செய்தியைப் படித்த மதுரையை சேர்ந்த வாசகி ஜானகி அம்மாள் சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளியை தொடர்பு கொண்டு தன் மகன் கார்த்திகேயனுடன் அங்கு சென்று மாணவி தனலட்சுமி சந்தித்து பேசினார். பின்னர் அவரின் சாதனை மெடல்களை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து மாணவி தனலட்சுமியின் பெற்றோர்கள் கூலி தொழிலாளர்கள் என்பதையும் அறிந்து கொண்டார்.
அப்போது மாணவியின் கல்வி செலவு முதல் விருப்பமான ஐபிஎஸ் படிப்பது வரையிலான உதவித்தொகை முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்துள்ளார். உறுதி அளித்த நாளிலிருந்து தொடர்ந்து ஏழு வருடமாக மாணவி தனலட்சுமிக்கு ஜானகி அம்மாள் உதவி செய்வது பாராட்டை பெற்றுள்ளது. தொடர்ந்து கல்விக்கு கை கொடுத்து வரும் ஜானகி அம்மாள் கூறியதாவது:
நாங்கள் முன்பு வந்தபோதே மாணவி தனலெட்சுமியின் கல்விக்கு உதவி செய்வதாக தெரிவித்து உறுதி அளித்து இருந்தோம். அதே போல் 2017ம் ஆண்டு 9ம் வகுப்புக்கான படிப்பு உதவி தொகை ரூபாய் 4,000 கொடுத்துள்ளோம். கடந்த ஆண்டும் 10ம் வகுப்புக்கு படிப்பு உதவி தொகையாக ரூபாய் 4,000 கொடுத்துள்ளோம். தொடர்ந்து மூன்றாம் வருடமாக 11ம் வகுப்பு படிப்பு உதவி தொகை ரூபாய் 10,500 கொடுத்துள்ளோம்.
கடந்த ஆண்டு கொரோனா காலமாக இருப்பதால் மாணவியை நேரில் சந்திக்க இயலவில்லை. இருந்த போதிலும் இந்த மாணவியின் குடும்ப சூழ்நிலையின் நிலை கருதி வங்கி வழியாக அவரது படிப்பு உதவி தொகையாக ரூபாய் 11,000 அனுப்பி இந்த உதவியை செய்துள்ளோம். மாணவியின் வீடு குடிசை வீடாக உள்ளது. இந்த மாணவி தேசிய திறன் வழி தேர்விலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிந்தோம். மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. தொடர்ந்து மாணவியின் மேல்படிப்பு தொகை முழுவதையும் ஏற்று கொள்கிறோம்.
சொன்னதை போன்று இந்த ஆண்டும் மாணவி அரசு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்து சேர்ந்துள்ளார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தோம் .கடந்த ஆண்டு மாணவியின் வீட்டுக்கே நேரில் வந்து ரூபாய் 20,000 வழங்கி உள்ளோம். கடந்த ஆண்டும் ரூபாய் 16,000 வழங்கி உதவி செய்தோம். இந்த ஆண்டு எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வங்கி மூலம் மாணவிக்கு ரூபாய் 17,000 அனுப்பி உள்ளோம்.
பல ஆண்டுகளாக, நாளிதழை தொடர்ந்து படித்து வருகிறேன்; நாளிதழின் தீவிர வாசகி. இப் பள்ளி மாணவர்களின் சாதனைகளை, வெளி உலகிற்கு எடுத்துக்காட்ட முயற்சிக்கும், பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் மற்றும் தனலட்சுமியின் சாதனையை வெளிக்கொண்டு வந்த, நாளிதழுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறுகையில், தொடர்ந்து நான்காம் ஆண்டாக நேற்று இரவு ஜானகி அம்மையாரின் மகன் கார்த்திகேயன் என்னை தொடர்பு கொண்டு மாணவிக்கு உதவி தொகை வழங்க வருவதாக சொன்னார்கள். கொரோனா காலமாக இருப்பதால் மாணவியின் வங்கி கணக்குக்கு கல்வி உதவி தொகையை அனுப்புவதாக கூறினார்கள். அதன்படி மாணவியின் தாயாரின் வங்கி கணக்குக்கு கல்வி உதவி தொகை அனுப்பட்டுள்ளது.
சிலர் உதவி செய்வதாக சொல்லி விட்டு அத்தோடு சென்று விடுவார்கள் .ஆனால் தொடர்ந்து ஏழாம் ஆண்டாக மதுரையிலிருந்து தேவகோட்டை தேடி வந்து உதவி செய்த ஜானகி அம்மாளுக்கும் ,கார்த்திகேயனுக்கும், நாளிதழுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.
ஜானகி அம்மாளின் இந்த உதவும் செயலை மனதார நாமளும் பாராட்டலாமே..!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
{{comments.comment}}