மதுரை வடக்கம்பட்டி முனியாண்டி கோவிலில் திரண்ட பக்தர்கள்.. கமகம பிரியாணியுடன் செம விருந்து!

Jan 25, 2025,12:19 PM IST

மதுரை: மதுரை திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி முனியாண்டி கோவில் 90 வது பிரியாணி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டியில் முனியாண்டி சுவாமி கோவில் உள்ளது.  இங்கு நடைபெறும் பிரியாணி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.




இந்த பிரியாணி திருவிழா ஆண்டுதோறும் ஒவ்வொரு தை மாதம் வரும் இரண்டாவது வெள்ளிக்கிழமை சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகளும் பூஜைகளும் செய்யப்பட்டு, பிறகு சனிக்கிழமை காலை கிடா வெட்டி பிரியாணி சமைத்து மக்களுக்கு அன்னதானமாக வழங்கப்படுவதை வழக்கமாகக் கொண்டு வருகின்றனர். 


400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு தமிழக மட்டுமல்ல அது திருச்சி, சென்னை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஆடு கோழி என தங்கள் நேத்தி கடன்களை செலுத்துவது வழக்கம். அந்த வரிசையில் இந்த வருடம் வழக்கம்போல் 90 ஆவது பிரியாணி திருவிழா இன்று கொண்டாடப்பட்டது.




இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேற்று பூ பழம் தேங்காய் வாழைப்பழம் கொண்ட தட்டுகளை தலையில் சுமந்தபடியே ஊர்வலமாக வந்து சாமிக்கு படைத்து வழிபாடு செய்தனர்.  கோயில் நிலைமாலையுடன் கிராம இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாடைந்தனர்.


அதேபோல் நினைத்தது நிறைவேறிய பக்தர்கள்  ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர்.அப்போது சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.




இந்த விழாவின் இறுதியில் 300 ஆடுகள் மற்றும் 150 கோழிகள் கொண்டு 3000 கிலோ அரிசியில் கமகமவென தயாரிக்கப்பட்ட அசைவ பிரியாணி இன்று காலை முனியாண்டி சாமிக்கு  படையிலிடப்பட்டது. இதனை தொடர்ந்து படையலிடப்பட்ட பிரியாணி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.


வடக்கம்பட்டி பிரியாணி கடை அல்லது முனியாண்டி விலாஸ் என்ற பெயரிலான கடைகளை நடத்துவோர் இந்தக் கோவிலுக்கு வந்து நேர்ந்து விட்டுத்தான் அந்தக் கடையை ஆரம்பித்து நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Chennai AC EMU Train service.. தொடங்கியது ஏசி புறநகர் ரயில் சேவை.. கட்டணம் தான் ஜாஸ்தி!

news

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.. துரை வைகோ அறிவிப்பு

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

news

மகள், கணவரின் Mental Torture.. வருங்கால மருமகனுடன் எஸ்கேப் ஆன மாமியார்.. திரும்பி வந்ததும் டிவிஸ்ட்!

news

வேண்டியதை நடத்தித் தரும் அபிஜித் நேரம்.. அற்புதமான அந்த 24 நிமிடங்கள்!

news

பாபா வங்கா சொன்னது நடக்கப் போகிறதா?.. திக் திக் பரபரப்பு எதிர்பார்ப்புடன் உலக நாடுகள்!

news

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பா?.. திட்டவட்டமாக மறுத்தது மத்திய அரசு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 19, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

தங்கம் விலையில் மாற்றமில்லை.... நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது!

அதிகம் பார்க்கும் செய்திகள்