வாங்க.. சிங்கப்பூர் போகலாம்.. மதுரையிலிருந்து தினசரி.. புதிய சேவை!

Oct 13, 2023,10:41 AM IST

மதுரை: மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு அக்டோபர் 22ம் தேதியிலிருந்து நேரடி விமானத்தை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இயக்கவுள்ளது.


பறந்து செல்ல மனம் இருந்தும்.. என்பது போல வாழ்க்கையில் ஒரு முறையாவது விமானம் மூலம் பறக்க மாட்டோமா என்ற எண்ணம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆவலாக உள்ளது. அப்படிப்பட்ட விமான போக்குவரத்து பலரின் கனவாகவும்  இருக்கிறது. இன்று இந்தக் கனவு பலருக்கும் நிஜமாகி விட்டது.




ஒரு காலத்தில் மதுரையிலிருந்து சென்னைக்கு விமானம் போவதே பெரிய கனவாக இருந்தது. பின்னர் அது மாறியது. இன்று மதுரையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கும், நாடுகளுக்கும் விமான சேவை நடந்து வருகிறது. அந்த வகையில் இப்போது இன்னொரு பெருமை கிடைத்துள்ளது.


வருகிற 22ஆம் தேதி முதல் மதுரையிலிருந்து சிங்கப்பூர் இடையே தினசரி விமான சேவை இயக்கப்படும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 


இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி திருநாள் இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் முன்கூட்டியே ரயில், பஸ் போன்ற போக்குவரத்து சாதனங்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். பல நாடுகளில் தமிழகத்தைச் சேர்ந்த நிறைய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வசதிக்கேற்றார் போல் பல விமான நிறுவனங்கள் புதிய விமானங்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது.


அந்த வரிசையில் மதுரை டூ சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூர் டூ மதுரை என இரு மார்க்கத்திலும் நேரடியாக தினசரி விமான சேவையை ஏர் இந்தியா  எக்ஸ்ப்ரஸ் நிறுவனம் வரும் 22 ஆம் தேதி முதல் வழங்க உள்ளது.  சிங்கப்பூரில் நிறைய தமிழ் மக்கள் வாழ்கின்றனர். சிங்கப்பூருக்கு தினசரி விமான சேவை என்ற அறிவிப்பு சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டுக்காரர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்திற்கான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வமான ஏர் இந்தியா விமான எக்ஸ்பிரஸ் இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.


பிறகென்ன பிளைட்டைப் பிடிங்க.. சிங்கப்பூருக்கு ஜாலியா போய்ட்டு வாங்க!

சமீபத்திய செய்திகள்

news

Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

news

என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

அதிகம் பார்க்கும் செய்திகள்