மதுரை: உலகக் கல்வி இதழில், மதுரை மாநகரின் தலை சிறந்த பள்ளிகள் தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் டிவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த 2 பள்ளிகள் இடம் பெற்றுள்ளன. அதில் டிவிஎஸ் பள்ளி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
உலக கல்வி இதழ் சார்பாக ஒரு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நகரங்களில் செயல்படும் சிறந்த பள்ளிகளின் பட்டியல் அதில் இடம் பெற்றுள்ளது. அந்த வரிசையில் மதுரையின் தலை சிறந்த 10 பள்ளிகள் பட்டியலும் இடம் பெற்றுள்ளது.
மதுரை மாநகரின் தரவரிசை பட்டியலில் தி டிவிஎஸ் பள்ளி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதே வரிசையில் லட்சுமி பள்ளி நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்த இரு பள்ளிகளும் ஒரே குழுமத்தைச் சேர்ந்தவை என்பதால் அந்தப் பள்ளிகளின் ஆசிரியர்களும் மாணவர்களும் இதைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்த தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பள்ளிகள்:
1. ஜெயின் வித்யாலயா
2. டிவிஎஸ் பள்ளி
3. விசாகா பள்ளி
4. லட்சுமி பள்ளி
5. வேலம்மாள் வித்யாலயா
6. சாய்ராம் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல்
7. குயின் மீரா இன்டர்நேஷனல் ஸ்கூல்
8. வல்லப வித்யாலயா
9. எஸ்.பி.ஓ.எ மெட்ரிகுலேஷன் அண்ட் ஹையர் செகண்டரி ஸ்கூல்
10. விஎம்ஜி ஸ்கூல்
மதுரையின் அடையாளம் டிவிஎஸ்
மதுரையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று டிவிஎஸ். ஒரு காலத்தில் மதுரையில் சிட்டி பஸ்களை இயக்கி வந்தது டிவிஎஸ் நிறுவனம்தான். பின்னர்தான் அது அரசுடமையாக்கப்பட்டு பாண்டியன் போக்குவரத்துக் கழகமாகவும், பின்னர் மாநகரப் போக்குவரத்துக் கழகமாகவும் செயல்பட்டு வருகிறது. தொழிலில் மட்டுமல்லாமல் தற்போது கல்வியிலும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து டிவிஎஸ் நிறுவனம் செயல்படுகிறது.
டிவிஎஸ் நிறுவனத்தின் கீழ் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. டிவிஎஸ் கல்வி நிறுவனத்தின் கீழ், டிவிஎஸ் லக்ஷ்மி, டிவிஎஸ் சுந்தரம், தி டிவிஎஸ் ஆகிய 3 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. டிவிஎஸ் பள்ளி கடந்த 1972 ஆம் ஆண்டு டி.வி.சுந்தரம் அய்யங்காரின் சந்ததியினரால் 40 மாணவர்களுடன் நிறுவப்பட்டது. இப்பள்ளி லட்சுமி வித்யா சங்கம் என்ற அமைப்பால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இங்கு ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகுப்புகளும் இரண்டு நேரங்களில் (ஷிப்ட்) இயங்கி வருகிறது. இது முற்பகல் பள்ளி மற்றும் பிற்பகல் பள்ளி என அழைக்கப்படுகிறது. முற்பகல் பள்ளி காலை ஏழு முதல் மதியம் 12:20 வரை நடைபெறுகிறது. அதேபோல் பிற்பகல் 1:30 க்கு தொடங்கி மாலை 6:00 மணி வரை நடைபெறுகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 4096 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அதேபோல் ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு சிறந்த கற்றல் அனுபவத்தை வழங்கும் நோக்கில் க்ரேயா என்ற நிறுவனத்தின் சேவைகளை பயன்படுத்தி வருகிறது. இது தவிர டிவிஎஸ் பள்ளி அருகிலேயே மலையலையர் பள்ளியும் இயங்கி வருகிறது. இங்கு மாண்டிசோரி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
வித்தியாசமான காலை வணக்கப் பாடல்
ஒவ்வொரு பள்ளியிலும் காலை வகுப்பறைகள் ஆரம்பிக்கும் முன்பு மும்மதங்களை பின்பற்றும் பாடல்கள் ஒலிக்கச் செய்து பிரேயர் என சொல்ல கூடிய பிரார்த்தனைகள் நடத்துவது வழக்கம். ஆனால் இப்பள்ளியில் இந்த வழக்கம் நீங்கலாக வித்தியாசமான காலை வணக்கப் பிரேயர் பாடல் பாடப்படும்..
"எங்கள் பள்ளியே டி வி எஸ் பள்ளி
அறிவு மிகும் சுந்தர நல் அய்யங்கார் பெயர் விளங்க
நெறியில் மிகும் சிறுவர் எல்லாம் நேர்ந்து கலை கற்பதற்கே
நெறிமிகும் வெங்கமலத்தை வீற்றிருக்கும் கலைச்செல்வி பொறியினோடு வந்து புகும் கலசாலை பொலிவுறவே" என்ற பாடல் ஒலிக்கும்.
இது மட்டுமல்லாமல் கலை மற்றும் கைவினை பொருட்கள் தயாரித்தல், கால்பந்து குழு, பரதநாட்டியம், கிராப்ட் என சொல்லக்கூடிய களிமண் மாதிரிகள், ஓவியப் பயிற்சி, ஸ்கேட்டிங், இசை, டேக்வாண்டோ, யோகா ஃபுட்பால், வாலிபால் போன்ற விளையாட்டு உள்ளிட்ட கூடுதல் நடவடிக்கைகளையும் இப்பள்ளி பின்பற்றி வருகிறது. மேலும் விளையாட்டில் பச்சை, சிவப்பு, மஞ்சள், நீலம், என நான்கு குழுவாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் விளையாட்டு தினம் என்பதை இப்பள்ளி கொண்டாடி வருகிறது. அப்போது ஒலிம்பிக் போட்டிகளில் எப்படி ஒலிம்பிக் சுடர் ஏற்றி முறையாக விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பிக்கப்படுகிறதோ அதே போன்று இப்பள்ளியிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் கீதா சான்டிங் (பகவத் கீதை ஒப்புவித்தல்), திருக்குறள் போட்டி, கவிதை போட்டி, ஓவிய போட்டி, கட்டுரை போட்டி போன்றவற்றிலும் மாணவர்களை ஈடுபடுத்தி வருகிறது டிவிஎஸ் பள்ளி. இதனால் மாணவர்களின் தனித்திறமையை உருவாக்கும் நோக்கில் இப்பள்ளியில் சேர்க்க மதுரை மக்கள் போட்டி போட்டு கொண்டு வருகின்றனர். இவ்வளவு சிறப்பம்சங்கள் நிறைந்ததாலேயே இப்பள்ளியில் சீட் கிடைப்பதே மிகவும் கடினம் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவம்பர் 1ம் தேதி.. 11 மாவட்டங்களில் பரவலாக கன மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!
Draft electoral Roll: தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய தொகுதி சோழிங்கநல்லூர்.. சிறிய தொகுதி கீழ் வேளூர்!
அதிமுகவை தவெக தலைவர் விஜய் விமர்சிக்காதது ஏன் தெரியுமா?.. எடப்பாடி பழனிசாமி பலே விளக்கம்!
பத்தவச்சுட்டியே பரட்டை.. விஜய் பேச்சால் சலசலப்பு.. கப்சிப்பாக்க அதை கையில் எடுக்குமா திமுக?
Deepavali Rush: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை.. நாளை நீட்டிப்பு.. இரவு 12 மணி வரை இயங்கும்!
தம்பி விஜய் கூட இருக்கிற ரசிகர்களில் பாதிப் பேர்.. எனக்குதான் ஓட்டுப் போடுவாங்க.. சீமான்
இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள்.. 2026ல் நமது இலக்கை அடைவோம்.. தவெகவினருக்கு விஜய் அழைப்பு!
Deepavali: தமிழ்நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு.. நாளை அரை நாள் விடுமுறை அறிவிப்பு!
ரூ. 98 கோடி திட்டங்களை தொடங்கி வைத்து.. ரூ. 426 கோடி திட்டங்களைத் திறந்து வைத்த.. முதல்வர் ஸ்டாலின்
{{comments.comment}}