ஒரு குறையும் இல்லை.. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் லட்டு தரமாக உள்ளது.. உணவு பாதுகாப்புத்துறை

Sep 26, 2024,02:44 PM IST

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் லட்டு தரமாக உள்ளதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவில் பிரசாதங்களில் கலப்படம் என்ற செய்தி மக்களை உலுக்கி வருகிறது. குறிப்பாக சாமி நம்பிக்கை உள்ளவர்களை அது கவலைக்குரியதாக்கியுள்ளது. சமீபத்தில் திருப்பதி கோவில் பிரசாதமான லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக வந்த செய்தி அனைவரையும் அதிர வைத்தது. அதே திருப்பதி கோவில் லட்டில் குத்கா பாக்கெட் கிடந்ததும் சமீபத்தில் இன்னொரு பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த நிலையில், தமிழ்நாட்டின் முக்கிய கோவில்களில் ஒன்றான மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தரமாக உள்ளது என்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 




தமிழகத்தில் உள்ள முக்கியமான கோவில்களுள் ஒன்றாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோவிலில் 2019ம் ஆண்டு முதல் பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக லட்டு தயாரிக்கும் இயந்திரங்கள் வாங்கப்பட்டு அதன் மூலம் ஆயிரக்கணக்கான லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி வடை, அப்பம் உள்ளிட்டவைகளும் பிரசாதமாக விற்கப்பட்டு வருகிறது.


திருப்பதி கோவில் லட்டு விவகாரத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டு கோவில் பிரசாதங்கள் குறித்தும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர் அழகர்கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். பிரசாதம் தயாரிக்கும் உணவுக்கூடத்தை இவர் நேரடியாக ஆய்வு செய்தாா். இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெயராம பாண்டியன் கூறுகையில் மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் குறித்து பலமுறை ஆய்வு செய்துள்ளோம். லட்டு உள்பட அனைத்தும் சுத்தமாகவும் தரமாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது என்று கூறினார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

news

பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!

news

குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது

news

மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!

news

முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி

news

தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!

news

BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!

news

64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!

news

என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!

அதிகம் பார்க்கும் செய்திகள்