Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..

Apr 01, 2025,06:24 PM IST

மதுரை: உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 12ஆம் தேதி வரை முக்கிய வைபோவங்கள் நடைபெற உள்ளன.


சங்க இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், இலக்கியம், கலை என பல்வேறு அடையாளங்களுடன் திகழும் மதுரை மாநகருக்கு என்று சிறப்பு அந்தஸ்து உள்ளது.  சங்கம் வளர்த்த மதுரை, தூங்கா நகரம், மிகப் பழமையான நகரம், கோயில் மாநகரம், என்ற பல்வேறு சிறப்பு பெயர்களை பெற்றுள்ளது. குறிப்பாக மதுரையின் அடையாளமாக, மதுரையின் மையப் பகுதியில், கம்பீரமாக நான்கு கோபுரங்களுடன் காட்சி அளிக்கிறது மீனாட்சியம்மன் கோவில். இக்கோவில் ஆயிரம் வருடங்களுக்கு மேல் மிகவும் பழமையான  பிரசித்தி பெற்ற தலமாகும். ‌ இங்கு ஆவணி மூலத் திருவிழா, பங்குனி உத்திரம், முளைகட்டு திருவிழா, மாசி திருவிழா, சித்திரை திருவிழா என வருடம் முழுவதும் கொண்டாடப்படும் திருவிழாக்களால் மதுரை மாநகர் எப்போதுமே களைக்கட்டி இருக்கும். அதிலும் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. பத்து நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படும் இத்திருவிழாவில் மீனாட்சி அம்மன் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்துடன் நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இதில் மீனாட்சி திருக்கல்யாணம், பட்டாபிஷேகம், திக்கு விஜயம், திருத்தேரோட்டம், பூப்பல்லாக்கு, போன்றவை மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும். அதே சமயத்தில் இந்த விழாக்களின் போது மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பரதநாட்டியம், என ஆட்டம் பாட்டத்துடன் யானை, ஒட்டகம், காமதேனு என அணி வகுப்புகள் இருக்கும். இது மட்டுமல்லாமல் தங்கை மீனாட்சி திருக்கல்யாணத்தை காண வரும் கள்ளழகர் புறப்பாடு, கள்ளழகர் எதிர்சேவை, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல் போன்றவை முக்கியமான விழாக்களாகும்.




இந்த சித்திரைத் திருவிழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள்  மதுரைக்கு வந்த வண்ணம் இருப்பர். அப்போது மதுரையே உலுங்கும் அளவிற்கு எங்கு பார்த்தாலும் மனித தலைகளாக ஆக்கிரமித்து இருக்கும்.  மக்கள் மனதில் மகிழ்ச்சி உற்சாகம் ஆட்டம் பாட்டம் என பரபரப்பாக காணப்படும். அந்த வகையில் அனைவரின் எதிர்பார்ப்புடன் திகழும்  2025 ஆம் ஆண்டுக்கான சித்திரத் திருவிழா வரும் ஏப்ரல் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.


மதுரை சித்திரை திருவிழா இந்த ஆண்டு வரும் 28ஆம் தேதி திங்கட்கிழமை மீனாட்சியம்மன் கோவிலில் சாந்தி பூஜை நடைபெறும். பின்னர் ஏப்ரல் 29ஆம் தேதி செவ்வாய் கிழமை கொடியேற்றத்துடன்  துவங்குகிறது.


மே 8, வியாழன் அன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்


மே 9, வெள்ளிக்கிழமை, திருத்தேரோட்டம்


மே 11, ஞாயிறு, கள்ளழகர் எதிர்சேவை


மே 12, திங்கட்கிழமை, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகியவை நடைபெறுகிறது.





மதுரை சித்திரை திருவிழாவை காண பக்தர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர் அதே சமயம் இந்த வருடம் சித்திரை திருவிழா பள்ளி மாணவர்களின் விடுமுறை முடிந்து சரியான நேரத்தில் வருகிறது. இதனால் கூட்டம் மேலும் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்