போலீஸ் உதவியின்றி கஞ்சா விற்பனை நடக்க வாய்ப்பில்லை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

May 08, 2024,06:36 PM IST

மதுரை: காவல்துறையின் உதவி இல்லாமல் கஞ்சா வியாபாரம் நடக்க வாய்ப்பில்லை; நடவடிக்கை கடுமையாக இருந்தால் கஞ்சா புழக்கமும், வழக்குகளும் எப்படி அதிகரிக்கிறது? என்று உயர்நீதி மன்றம் மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.


ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை, யானைமலை பகுதியில் கடந்த ஏப்., 22ம் தேதி, 7 பேர் போதையில் ரகளை செய்து வந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கான்முகமது மீது போதையில் இருந்த ஆசாமிகள் தாக்குதல் நடத்தினர். இதில் கான்முகமது படுகாயமடைந்தார். இந்த வீடியோ இணைய பக்கங்களில் பரவி வைரலாகியது. 




இதைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.மேலும், இந்த சம்பவத்தில் காவல் துறையினர் உதவியுடன் தான் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், திருமுருகன் தொடர்ந்த இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் தனபால் ஆகியோர் அடங்கிய குழு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஒத்தக்கடை பகுதியில் ரகளை ஈடுபட்ட நபர்கள் மது அருந்தி இருந்தனர். அவர்கள் கஞ்சாவை பயன்படுத்தவில்லை.  கடந்த மூன்று ஆண்டுகளில் கஞ்சா விற்பனை தொடர்பாக வெளி மாநிலங்களைச் சேர்ந்த 2,486 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.


அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,  கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காவல்துறையின் உதவி இல்லாமல் கஞ்சா வியாபாரம் நடைபெற வாய்ப்பு இல்லை. அப்படி இருக்கும்போது கஞ்சா புழக்கமும்,வழக்குகளும் எப்படி அதிகரிக்கும் என கேள்வி எழுப்பினர்.எத்தனை வழக்குகளில் நீதிமன்றங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தொடர் கேள்விகளை எழுப்பினர். மேலும், இது குறித்து தமிழக உள்துறைச் செயலர் தமிழக காவல்துறை டிஜிபி போதை பொருள் கட்டுப்பாடு பிரிவு இயக்குனர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?

news

மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்

news

தங்கம் விலை விடாமல் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது ஏன்.. நிபுணர்கள் தரும் விளக்கம் இதுதான்!

news

கிண்டி அரசு மருத்துவமனை டாக்டரைக் கத்தியால் குத்திய விக்னேஷுக்கு.. ஜாமீன் மறுப்பு!

news

Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

news

TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!

news

AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!

news

Lunch box recipe: கோவக்காய் வேர்க்கடலை பொறியல்.. ஒரு விசில்.. ஒரு பொறியல்.. ஓஹோ டேஸ்ட்!

news

Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?

அதிகம் பார்க்கும் செய்திகள்