அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. "இவங்கதான் நடத்தணும்".. மதுரை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!

Dec 20, 2023,04:44 PM IST

மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை மாவட்ட நிர்வாகமும் , மதுரை மாநகராட்சியும் இணைந்து நடத்த சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு பிரப்பித்துள்ளது.


தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படுவது ஜல்லிக்கட்டு. பொங்கல் திருநாளையொட்டி நடத்தப்படும் இவ்வீர விளையாட்டு மிகவும் சிறப்புடையதாகும். பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும், மதுரை மாவட்டத்தில்  நடத்தப்படும் இவ்விளையாட்டு உலக பிரசித்தி பெற்றதாகும். 


குறிப்பாக அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகள்தான் உலகப் பிரசித்தி பெற்றது.  ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டு, நீண்ட சட்டப் போராட்டம் நடந்து தற்போது உச்சநீதிமன்றமே இந்தப் போட்டி கலாச்சாரம் தொடர்புடையது என்று கூறி தடைகளை தகர்த்து உத்தரவிட்டு விட்டது. இதனால் ஜல்லிக்கட்டுக்கு இருந்து வந்த அத்தனை சிக்கல்களும் நீங்கி விட்டன.




ஜல்லிகட்டு போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ம் தேதி அவனியாபுரத்திலும், 16ம் தேதி பாலமேட்டிலும், 17ம் தேதி அலங்காநல்லூரிலும் நடைபெறும். இப்போட்டியினை காண வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் இருந்து பார்வையாளர்கள் வருவார்கள். 


அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியினை தென்கால் பாசன விவசாயிகளின் சங்கத்தின் நிர்வாகிகள் கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வந்தனர். ஆனால் இதில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கே முக்கியத்துவம் தரப்படுவதாக குற்றம்சாட்டி நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து போட்டியை மாவட்ட நிர்வாகமே நடத்த வேண்டும் என மதுரையை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜல்லிகட்டு போட்டியில் ஜாதி, மதத்தை புகுத்துவதை ஏற்றுகொள்ள முடியாது. இந்த போட்டிகளை மதுரை மாவட்ட நிர்வாகமே இனி நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்