வெளுக்கும் வெயில்.. 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டும்.. கவனமாக இருக்க மதுரை கலெக்டர் அறிவுரை!

Apr 16, 2024,10:24 AM IST

மதுரை: தமிழகத்தில் வெயில் கொளுத்தி வருவதால், உச்சிப் பகல் நேரத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும்என மதுரை மாவட்ட மக்களுக்கு  ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தியுள்ளார்.


கடந்த இரண்டு தினங்களாக தென் மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளுமை நிலவி வந்தது. தற்போது வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதால் அனல் காற்று அதிகம் வீசி வருகிறது. இதனை  சமாளிக்க முடியாமல் மக்கள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.


மேலும் வெயிலின் தாக்கம்  படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று தமிழகத்தில் எட்டு இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டிற்கும் அதிகமாக வெயில் கொளுத்தியது. இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, பொதுமக்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.




மக்கள் பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை  வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். வெயில் அதிகமாக உள்ள பகுதிகளில் அனல் காற்று அதிகம் வீசி வருகிறது. இதனால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வப்போது போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். நீர் சத்துக்கள் நிறைந்த பழச்சாறுகளை அருந்த வேண்டும். மேலும் வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்க கூடாது.


வெயில் காலங்களில் ஏற்படும் அவசர தேவைகளுக்கு 1077 மற்றும்1070 ஆகிய இலவச எண்களை தொடர்பு கொள்ளலாம் என மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்