மதுரை: மதுரையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் நக்கீரர் மற்றும் பெரியார் நுழைவாயில்களை இடித்து அப்புறப்படுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜைனப் பீவி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மற்றும் மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள அலங்கார நுழைவு வாயில்கள் உள்ளன. இந்த இரண்டு நுழைவு வாயில்களும் போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக உள்ளன. இதனால் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் போன்றவை முந்தி செல்ல அலங்கார வளைவுகளின் ஓரங்களை பயன்படுத்துகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது.
வாகன ஓட்டிகளுக்கும் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. ஆகவே இதை அப்புறப்படுத்த வேண்டும் என பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு உயர் நீதி மன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியம், சுந்தர மோகன் ஆகியோர் அமர்வு முன்பாக விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது மதுரை மாநகராட்சி தரப்பில் நுழைவு வாயில்களை அப்புறப்படுத்துவதற்கு அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மதுரை நகர் பகுதியில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டதன் நினைவாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே நக்கீரர் நுழைவு வாயில் அமைக்கப்பட்டது.
அதேபோல கேகே நகர் பகுதியில் பெரியார் நுழைவு வாயில் அமைக்கப்பட்டது. ஏறக்குறைய 43 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அலங்கார நுழைவு வாயில்கள் கட்டப்பட்டன. தற்போது போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகமாகிறது. சாலைகள் அகலப்படுத்தப்பட்டு விட்டன.
இதனால் இந்த இரு நுழைவு வாயில்களின் தூண்களும் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையின் நடுவே அமைந்துள்ளது. இத்தகைய தூண்களை பலர் வணிக நோக்கத்திற்கு பயன்படுத்துகின்றனர். போக்குவரத்துக்கும், மக்களுக்கும் இடையூறாக இருக்கும் நுழைவு வாயில்களை அகற்ற எந்த ஆய்வும் தேவையில்லை. ஆறு மாதங்களுக்கு உள்ளாக இரு நுழைவு வாயில்களையும் அகற்ற மதுரை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு விரும்பினால் சாலையின் இரு ஓரங்களையும் இணைக்கும் வகையில் பெரிய அளவிலான நுழைவு வாயில்களை அமைத்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
'இட்லி கடை' பிரியர்களே.. ஹேப்பி நியூஸ் .. அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறார் தனுஷ்!
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
{{comments.comment}}