விஜயலட்சுமி புகாரை ரத்து செய்யமுடியாது.. 3 மாதத்தில் விசாரிக்க ஹைகோர்ட் உத்தரவு.. சீமானுக்கு சிக்கல்

Feb 17, 2025,06:30 PM IST

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய முடியாது எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.


கடந்த 2011ம்  ஆண்டு வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 


விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை எதிர்த்து சீமான் அளித்த மனுத்தாக்கலில், கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012ம் ஆண்டிலேயே திரும்பப் பெறுவதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் வழக்கை முடித்து வைக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். 




இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, வழக்கை ரத்து செய்வது தொடர்பாக நடிகை வியலட்சுமி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டது.  அதன் பின்னர் இந்த வழக்கு தொடர்ந்து நிலுவையில் இருந்தது.


இந்தநிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் நடிகை விஜயலட்சுமி கொடுது்த புகாரை ரத்து செய்ய முடியாது எனக்கூறி சீமான தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சீமான் மீது விஜயலட்சுமி அளித்த புகாரை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என வளசரவாக்கம் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


முன்னதாக விஜயலட்சுமி வாக்குமூலத்தை காவல்துறை சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அப்போது சீமானின் முதல் மனைவியா விஜயலட்சுமி என்று நீதிபதி கேட்டபோது, விஜயலட்சுமிக்கும் - சீமானுக்கும் மதுரையில் வைத்து திருமணம் நடந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சீனாவில் மீண்டும் ஒரு கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.. வவ்வாலிலிருந்து மனிதர்களுக்கு பரவுமாம்!

news

2000 கோடி அல்ல.. 10000 கோடியே கொடுத்தாலும் சரி.. கையெழுத்துப் போட மாட்டோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

பிரதமர் நரேந்திர மோடியின்.. முதன்மைச் செயலாளரானார்.. சக்திகாந்த தாஸ்.. ஓய்வுக்குப் பின் புதுப் பதவி!

news

தான் யார்.. எதற்காக வந்தோம் என்பதே கமல்ஹாசனுக்குப் புரியலையே.. தவெகவின் அதிரடி தாக்கு!

news

பிப்., 26ல் தவெகவின் ஆண்டு விழா.. 2000 பேருக்கு மட்டும் தான் அனுமதி..!

news

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா vs பாகிஸ்தான்.. நாளைக்கு ஜெயிக்காம விட்ரக் கூடாதுடா பரமா!

news

அனல் பறக்கும் பேச்சாளர்.. அதிரடி டிபேட்டர்.. நாம் தமிழர் கட்சியின் அடையாளம்.. யார் இந்த காளியம்மாள்?

news

தங்கச்சி காளியம்மாள் விலகுவதாக இருந்தால் விலகிக்கலாம்.. ரொம்ப நன்றி என்று சொல்வோம்.. சீமான்

news

சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள்.. நாம் தமிழர் கட்சிக்கு முழுக்கா?.. பரபரக்கும் இன்விடேஷன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்