சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அதன் உரிமையை இழந்த நிலையில் தற்போது அதிமுகவின் பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் அதிகாரத்தையும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இழந்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் சிறிது காலம் பிரிந்து அரசியல் செய்தனர். பின்னர் சசிகலா வெளியேற்றத்துக்குப் பின்னர் இருவரும் இணைந்தனர். ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வராகவும், எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதல்வர் பதவியிலும் இருந்து வந்தனர்.
ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பூசலால் இருவரும் பிரிந்தனர். பிரிந்த பிறகு அதிமுக யாருக்கு என்ற மோதலில் இருவரும் குதித்தனர். மாறி மாறி சட்டப் போராட்டங்கள் வெடித்தன. இதில் ஒவ்வொன்றாக தோற்று வந்தார் ஓபிஎஸ். இந்த நிலையில் தற்போது இன்னும் ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளார் ஓ.பி.எஸ்.
எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், அதிமுகவின் கட்சி சின்னம், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி கடந்த செப்டம்பர் மாதம் வழக்கு தொடர்ந்தார் எடப்பாடி பழனிசாமி. அதில், அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவதுமாக செயல்பட்டு வருகிறார். ஒருங்கிணைப்பாளர் எனவும் ஓ.பன்னீர்செல்வம் கூறிவருகிறார். இது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
இந்த வழக்கு முடியும் வரை முதலில் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என அவர் கோரி இருந்தார். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், அதிமுகவின் பெயர், கொடி உள்ளிட்டவற்றை ஓ.பி.எஸ் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதி சதீஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் அதிமுகவின் அனைத்து அடையாளங்களையும் இழந்துள்ளார் ஓ.பி.எஸ்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}