நீங்க "ஃபிளாட்" ஓனரா?.. இந்த செய்தியை முதலில் படிங்க.. சென்னை ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு!

Mar 15, 2024,06:51 PM IST

சென்னை:  அடுக்குமாடி கட்டுமான விதிகளின் படி தரைதள உரிமை அனைத்து குடியிருப்பு வாசிகளுக்கும் உள்ளது என்பதை பெருநகர வளர்ச்சி குழுமம் உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


பெசன்ட் நகரை சேர்ந்த அஸ்வின் வர்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பெசன்ட் நகரில் "ரமணியம் ஸ்வர்ணமுகி" என்ற அடுக்குமாடி குடியிருப்பை கட்டுமான நிறுவனம் போதுமான தரைதள வசதி இல்லாமல் விதிகளை மீறி கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளது. 




இதுகுறித்து சென்னைபெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு பின்னரும், கட்டுமான நிறுவனத்துக்கு ஆதாரவாக பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர். 


இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கட்டுமான நிறுவனம் சார்பில் எந்த விதிமீறல்களும் நடைபெறவில்லை, பெருநகர வளர்ச்சி குழும விதிகளின் படி கட்டுமானங்கள் முடிந்து உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.


ஆனால், மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முரளி குமரன், (Non FSI) தரைதள கட்டுமான விதிப்படி, கட்டிட உரிமையாளர்களுக்கு போதுமான இடங்கள் ஒதுக்கப்படவில்லை என தெரிவித்தார். 


இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், விதிகளின்படி தரைதள உரிமை அனைத்து குடியிருப்பு வாசிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். சட்டவிரோத கட்டுமானங்கள் இருந்தால் அவற்றை அகற்றி அனைத்து கட்டிட உரிமையாளர்களின் பொது பயன்பாட்டுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்துக்கு உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகள்

news

எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்

news

பாம்பன் பாலத்தை திறந்து வைக்க நாளை வருகிறார்.. பிரதமர் மோடி..பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

news

தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

இலங்கையில் பிரதமர் மோடி.. ஜனாதிபதி மாளிகையில் அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்பு..!

news

நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

தொடர் குறைவில் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!

news

தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்