சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து.. பதவிக்கு ஆபத்து?

Dec 19, 2023,09:13 PM IST

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியையும் சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பு வழங்கியுள்ளது.


திமுக ஆட்சி காலத்தில் 2006 -2011ம் ஆண்டு  உயர் கல்வி கனிமவளத்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.75 கோடி சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகள் சரியாக நிரூபிக்கப்படவில்லை என்று கூறி சென்னை சிறப்பு நீதிமன்றம் 2016ம் ஆண்டு இருவரையும் விடுதலை செய்தது.


இந்த விடுதலை வழக்கை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை 2017ம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பொன்முடி தரப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை சாட்சியங்களிடம் உண்மை தன்மை இல்லை மனைவியின் வருமானத்தை என்னுடைய வருமானமாக லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கிட்டு உள்ளது என்று வாதிடப்பட்டது.




இரு தரப்பு வாதங்களும் முடிந்த  நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணமாகியதால், வழக்கில் இருந்து விடுவித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினார்.மேலும், தண்டணை  குறித்து அறிவிப்பதற்காக டிசம்பர் 21ம் தேதி காலை 10.30க்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் ஒத்திவைத்தார்.இந்நிலையில், பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் நேரில் அல்லது காணொலி மூலமாக ஆஜராகவும் உத்தரவிட்டார்.


இந்த தீர்ப்பால் அமைச்சர் பொன்முடியின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவருக்கு 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால் உடனடியாக அமைச்சர் பதவியும், எம்எல்ஏ பதவியும்  பறி போய் விடும். அவரால் 6 வருடத்திற்கு தேர்தல்களிலும் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டு மண்ணில் பிரதமர் மோடி உறுதி தர வேண்டும்.. ஊட்டியிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

news

நவீன பாம்பன் கடல் பாலம்.. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.. புதிய ரயிலுக்கும் பச்சைக் கொடி!

news

அமைச்சர் நிர்மலா சீதாராமனை நான் சந்திச்சேனா.. நாம் தமிழர் தலைவர் சீமான் திட்டவட்ட மறுப்பு!

news

Tamil Nadu rains.. இன்னும் 10 நாட்களுக்கு மழைதான்.. தமிழ்நாடு வெதர்மேன் ஹேப்பி நியூஸ்!

news

அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது பெரும் போராட்டம்.. வீதிகளில் இறங்கிய மக்கள்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

news

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

அதிகம் பார்க்கும் செய்திகள்