கோயம்பட்டில்.. பயணிகளை ஏற்றலாம் இறக்கலாம்.. ஆம்னி  பஸ்களுக்கு.. ஹைகோர்ட் பச்சைக்கொடி!

Feb 10, 2024,12:20 PM IST

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றலாம், இறக்கலாம். போரூர், சூரப்பட்டு ஆகிய இடங்களிலிருந்தும் பயணிகளை ஏற்றிக் கொள்ளலாம். அதேசமயம், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பஸ்கள் கண்டிப்பாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்குப் போக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த ஜனவரி 24ஆம் தேதி  முதல், புதிதாக துவங்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள்  புறப்படும், வந்து சேரும் என போக்குவரத்து துறை ஆணையர்  உத்தரவிட்டிருந்தார். அதேபோல ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்தே புறப்பட வேண்டும், கிளாம்பாக்கத்திலேயே நிறுத்தப்பட வேண்டும் என்றும் அரசு உத்தரதவிட்டது. அதன்படி அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து  இயக்கப்பட்டு வருகிறது.




இந்நிலையில் அரசின் உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து சங்கங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி மஞ்சுளா விசாரித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:


மீஞ்சூரில் தயாராகி வரும் ஆம்னி பஸ் முனையம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் வரை தற்காலிகமாக சில உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது.


- கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பஸ் நிறுவனங்களின் பணிமனைகளிலிருந்து பஸ்களை இயக்கலாம்.


- போரூர், சூரப்பட்டு சுங்கச் சாவடிகளிலும் பயணிகளை ஏற்றிக் கொள்ளலாம். இதைத் தவிர வேறு எங்கும் பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது. இதுதொடர்பான உத்தரவுகளை அனைத்து பஸ் புக்கிங் செயலி நிறுவனங்களும் தெளிவாக அமல்படுத்த வேண்டும்.


- தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பஸ்கள், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு பயணிகளை ஏற்றிக் கொள்ள வேண்டும், அதேபோல இறக்க வேண்டும். இதை கட்டாயம் அவர்கள் பின்பற்ற வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்

news

பாம்பன் பாலத்தை திறந்து வைக்க நாளை வருகிறார்.. பிரதமர் மோடி..பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

news

தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

இலங்கையில் பிரதமர் மோடி.. ஜனாதிபதி மாளிகையில் அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்பு..!

news

நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

தொடர் குறைவில் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!

news

தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்