சென்னை: நகைச்சுவை நடிகர் கவுண்டமணிக்குச் சொந்தமான ரூ. 50 கோடி மதிப்பிலான இடத்தை நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின்னர் அவர் மீட்டுள்ளார்.
தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகராக, குணச்சித்திர நடிகராக, ஏன் வில்லனாகவும் கூட கலக்கியவர் கவுண்டணி. பல வருட காலம் முடி சூடா மன்னனாக திகழ்ந்த கவுண்டமணி கடந்த 20 வருடமாக ஒரு சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அதில் அவருக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது.
கடந்த 1996ம் ஆண்டு நளினி பாய் என்பவரிடமிருந்து கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் 5.45 கிரவுண்டு இடத்தை வாங்கினார் கவுண்டமணி. இந்த இடத்தில் பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டுவதற்காக அபிராமி பவுண்டேஷன் என்ற நிறுவனத்தை அணுகிய கவுண்டமணி இதற்காக ரூ. 3.58 கோடி பணத்தையும் கொடுத்துள்ளார். ஆனால் அந்த கட்டுமான நிறுவனம் கட்டுமானத்தை 2004ம் ஆண்டுடன் பாதியிலேயே நிறுத்தி விட்டு, அந்த இடத்தையும் கையகப்படுத்தி விட்டதாம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கவுண்டமணி சிவில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், முழுமையாக பணத்தைக் கொடுத்த பிறகும் கட்டுமானத்தை நிறுத்தியது தவறு. மேலும் நிலமும் கவுண்டமணிக்கே சொந்தம் என்றும் அதைத் திருப்பித் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும், அவருக்கு 2004ம் ஆண்டிலிருந்து மாதம் ரூ. 1 லட்சம் என்று கணக்கிட்டு நஷ்ட ஈட்டையும் வழங்குமாறும் ஹைகோர்ட் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அபிராமி பவுண்டேஷன் அணுகியது. ஆனால் அங்கு அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து தற்போது நிலம் கவுண்டமணிக்கே சொந்தமாகியுள்ளது. இதைத் தொடர்ந்து கோர்ட் ஊழியர்கள், காவல்துறையினர் உதவியுடன் சம்பந்தப்பட்ட இடத்தை கவுண்டமணி தரப்பு வழக்கறிஞர்கள் மீட்டு பத்திரங்களை வாங்கிக் கொண்டனர். அந்த இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளும் முழுமையாக அகற்றப்பட்டு விட்டன.
தற்போது இந்த நிலத்தின் மதிப்பு ரூ. 50 கோடியாகும் என்று கூறப்படுகிறது. இடத்தை வெற்றிகரமாக கைப்பற்றியுள்ள கவுண்டமணி, தான் விரும்பியபடி இந்த இடத்தில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டுவாரா அல்லது வேறு ஏதேனும் கட்டுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
{{comments.comment}}