சென்னை: பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. 55 அடி உயரத்தில் கொடிக் கம்பம் அமைத்தால், கொடி மக்கள் கண்ணுக்குத் தெரியாது. காக்கா, குருவி உட்காரத்தான் அது பயன்படும் என்றும் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வீடு பனையூர் பகுதியில் உள்ளது. இந்த வீட்டுக்கு அருகே சமீபத்தில் பாஜகவினர் 55 அடி உயர கொடிக் கம்பத்தை நிறுவ முயற்சித்தனர். இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த பலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்சினை வெடித்தது. இதையடுத்து போலீஸாருக்குப் புகார் போகவே போலீஸார் விரைந்து வந்து கொடிக் கம்பத்தை அகற்றினர். மாநகராட்சி அனுமதி இல்லாமல் கொடிக் கம்பம் நிறுவப்பட்டதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தின்போது பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டி, கொடிக் கம்பத்தை அகற்ற வந்த ஜேசிபி வாகனத்தின் கண்ணாடியை சேதப்படுத்தினார். இதில் கண்ணாடி உடைந்தது. இதையடுத்து அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை கானாத்தூர் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர்.
இந்த மனுவை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் இன்று விசாரித்தார். அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட இடத்தில் கொடிக் கம்பம் வைக்க மாநகராட்சி அனுமதி தரவில்லை. அனுமதி தரப்படாத இடத்தில் அதை மீறிக் கொடிக்கம்பம் வைக்க முயற்சித்தனர். இந்த வழக்கில் 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரையும் விடுவித்தால் விசாரணை் பாதிக்கப்படும். சாட்சிகளைக் கலைக்க இவர்கள் முயற்சிப்பார்கள் என்று வாதிடப்பட்டது.
விசாரணையின்போது குறுக்கிட்ட நீதிபதி சி.வி.கார்த்திகேயன், 55 அடி உயரத்தில் கொடிக் கம்பம் வைக்க முடிவு செய்ததே முதலில் முட்டாள்தனமானது. அத்தனை உயரத்தில் கொடிக் கம்பத்தை வைத்து அதில் கொடியைப் பறக்க விட்டால் அது மக்கள் கண்ணுக்கே தெரியாதே. காக்கா, குருவி உட்காரத்தான் அது பயன்படும் என்றார். அதைத் தொடர்ந்து, மாநகராட்சி அனுமதி தராத இடத்தில் மீண்டும் கொடிக் கம்பம் வைக்க மாட்டோ்ம் என்று பிரமானப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். ஜேசிபி உரிமையாளருக்கு 6 பேரும் தலா ரூ. 2000 இழப்பீடு தர வேண்டும் என்று உத்தரவிட்டு, 6 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்
தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா..?
மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு
சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி
பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}