ஓபிஎஸ் மனுக்கள் டிஸ்மிஸ்.. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்.. ஹைகோர்ட் உத்தரவு

Mar 28, 2023,11:21 AM IST
சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச்செயலாளர் தேர்தலை ரத்து செய்யக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயல்பட்டு வந்த நிலையில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற குரல் எழுந்தது. கட்சிக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்த இந்த குரல் பூதாகரமாக வெடித்து பெரும் பிளவாக மாறியது. ஒபிஎஸ் அணி மற்றும் இபிஎஸ் அணியாக கட்சி பிளவுபட்டது.



கூச்சல் குழப்பத்துடன் அதிமுக பயணித்து வந்த நிலையில் கடந்தாண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும் அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த பன்னீர்செல்வத்தையும் அவரின் ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை எதிர்த்து அடுத்தடுத்து பல்வேறு வழக்குகளை ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்தது. அதில் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்க தடை கோரியும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த இரண்டு வழக்கையும் விசாரித்த தனி நீதிபதி குமரேஷ்பாபு இன்று தீர்ப்பு வழங்கினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தீர்ப்பில் இதில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச்செயலாளர் தேர்தலை ரத்து செய்யக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்வதாக தனி நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பு வழங்கினார். பொதுச் செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடவும் தடை இல்லை என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

தொடர் தோல்வியை சந்தித்து வந்த ஒபிஎஸ்-க்கு தனி நீதிபதியின் தீர்ப்பு கைகொடுக்கும் என அவரது ஆதரவாளர்கள் நினைத்துக்கொண்டிருந்த நிலையில் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு பக்கம் ஒபிஎஸ் அணியினர் சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில் மறுபக்கம் எடப்பாடி ஆதரவாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று வெடி வெடித்து திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்