சென்னை: நடிகைகள் திரிஷா, குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் தொடர்ந்த வழக்கை ஹைகோர்ட் அதிரடியாக தள்ளுபடி செய்தது. மேலும் அவருக்கு ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் வார்த்தைகளை விட அது பெரிய பிரச்சினையானது. பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். திரிஷாவும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் மீது ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதுதொடர்பாக விசாரணையும் நடைபெற்றது.
விசாரணைக்குப் பின்னர் திரிஷாவிடம் மன்னிப்பு கோரி கடிதம் வெளியிட்டார் மன்சூர் அலிகான். அவரும் மன்னித்து விட்டதாக டிவீட் போட்டார். இந்த நிலையில் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக, திரிஷா, சிரஞ்சீவி, குஷ்பு ஆகியோர் என்னுடைய பேட்டியை முழுசா பார்க்காமல் அவதூறாகப் பேசி விட்டனர் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார். வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சதீஷ் குமார், பெண்கள் குறித்து பொது வெளியில் இப்படித்தான் பேசுவதா.. இப்படிப் பேசினால் அவர்கள் எதிர்த்துக் கருத்து கூறத்தானே செய்வார்கள். உண்மையில் திரிஷாதான் உங்கள் மீது வழக்குத் தொடர்ந்திருக்க வேண்டும். இதுபோன்ற செயல்படக் கூடாது என்று எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அதைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார். நேரத்தை வீணடிக்கும் வகையிலும், விளம்பரம் தேடும் நோக்கிலும் இந்த மனுவை மன்சூர் அலிகான் தாக்கல் செய்துள்ளார். இதற்காக அவருக்கு ரூ. 1லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. அதை அடையார் புற்று நோய் மருத்துவமனைக்கு 2 வாரத்தில் கொடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இது தேவையா மன்சூர்!
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}