சென்னை: மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நடந்த வழக்கு விசாரணையின்போது மூத்த வழக்கறிஞரும், திமுக எம்.பியுமான பி. வில்சனிடம் நீதிபதி ஆர்.சுப்ரமணியன் கடுமையாக நடந்து கொண்டது குறித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர் சங்கங்கள் முறையிட்டுள்ளன.
சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை திமுக எம்.பியுமான பி.வில்சன், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் டி என் பி எஸ் சி க்காக ஆஜரான வழக்கில், நீதிபதி ஆர். சுப்ரமணியன், பி.வில்சனை கண்டித்து பேசிய ஆன்லைன் விசாரணை வீடியோ காட்சிகள் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த வழக்கின் பின்னணி என்ன?.. இதுதொடர்பாக வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:
சம்பந்தப்பட்ட வழக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு எதிரான வழக்கு. முன்னாள் ராணுவத்திற்கான ஒதுக்கீடு வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளையில், விசாரித்த தனி நீதிபதி விக்டோரியா கவுரி, இருதரப்பு வாதங்களை கேட்டு, மனுதாரருக்கு சாதகமாக இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளார். பின்னர் அதே விசாரணைக்கு வந்த நீதிபதி ஆர் .என். மஞ்சுளா, வழக்கை விசாரித்து ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இறுதி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தநிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து டிஎன்பிஎஸ்சி தொடர்ந்த மேல் முறையீடு வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில், நீதிபதி. ஆர் சுப்பிரமணியன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. நீதிபதி ஆர். சுப்பிரமணியுடன் இந்த வழக்கை, ஏற்கனவே தனி நீதிபதியாக விசாரித்த நீதிபதி விக்டோரியா கவுரியும் இணைந்து விசாரித்தார்.
இதுபோன்ற வழக்குகள் வரும்போது சம்பந்தப்பட்ட தனி நீதிபதி அவராகவே வழக்கிலிருந்து விலகிவிடுவார். தனிநீதிபதி ஸ்தானத்திலிருந்து மனுதாரருக்கு சாதகமான உத்தரவு பிறப்பித்து விட்டு அதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இரு அமர்வில் இருக்கும் போது விசாரிக்க மாட்டார்கள். தானாக முன் வந்து விலகி விடுவார்கள். இதுதான் நீதி பரிபாலனத்தின் முறையான மரபு, காலம் காலமாக பின்பற்றப்படக்கூடிய நடைமுறை.
ஆனால் இந்த வழக்கைப் பொறுத்தவரை நீதிபதி விக்டோரியா கவுரி விசாரணையிலிருந்து விலகவில்லை. இதைத்தான் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ஏற்கனவே இந்த வழக்கில் நீதிபதி விக்டோரியா கவுரி பிறப்பித்த உத்தரவை சுட்டிகாட்டியுள்ளார். அதேசமயம், இந்த வழக்கிலிருந்து நீதிபதி விக்டோரியா கவுரி விலக வேண்டும் என அவர் நேரடியாக கூறவில்லை. ஆனால் நீதிபதி ஆர்.சுப்ரமணியன், தவறாக புரிந்துகொண்டு, கோபம் காட்டிப் பேசியதாக கூறப்படுகிறது.
வழக்கு விசாரணைகளின் போது திறந்தவெளி கோர்ட்டில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கவனமுடன் பேச வேண்டும் என பலமுறை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. வழக்கறிஞர்களை நீதிபதிகளுக்கு சரிசமமாக நடத்தவேண்டும் என தீர்ப்புகளை வழங்கி உள்ளது. நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் நாணயத்தில் இரு பக்கங்கள் என்றும் பலமுறை சுட்டிக்காட்டி உள்ளது. அண்மையில் கூட கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி திறந்தவெளி கோர்ட்டில் வரம்பு மீறி பேசிய வீடியோ வைரலாக, அதற்கு உச்ச நீதிமன்றம் கண்டித்தது. பின்னர் சம்பந்தப்பட்ட கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி மன்னிப்பும் கேட்டு விட்டார். நீதிபதிகளின் வரம்பு மீறிய பேச்சுகளை கட்டுபடுத்த சில அடிப்படை வழிகாட்டுதலை உச்ச நீதிமன்றம் வகுக்கும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அந்த சமயத்தில் சுட்டிக் காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது என்று வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
தலைமை நீதிபதியிடம் புகார்
இந்த நிலையில் நீதிபதி ஆர்.சுப்பிரமணியனுக்கு எதிராக வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் என்.மாரப்பன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் உள்ளிட்டோர் நீதிபதிக்கு தங்களது எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கங்களின் தலைவர்கள் கூறுகையில், மற்ற வழக்கறிஞர்கள் மீதும், வழக்கு தொடுத்தவர்களுக்கு எதிராகவும் அடிக்கடி இதுபோல வார்த்தைகளை பயன்படுத்துகிறார். நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் ஏன் தங்கள் சுயமரியாதையையும் கண்ணியத்தையும் தியாகம் செய்ய வேண்டும்?.
வழக்கறிஞர்கள் தங்களுக்கு கீழானவர்கள் என்ற தவறான எண்ணத்தை நீதிபதிகள் கொண்டுள்ளனர். நீதி பரிபாலனத்தில் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும், "ஒரு தேரின் இரு சக்கரங்கள்". வழக்கறிஞர்களை உரிய மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்துவதை உறுதிசெய்ய கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும். நீதிபதிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்தால் புகார் அளிக்க குறை தீர்ப்பு நடைமுறை கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
{{comments.comment}}