சிவராஜ் சவுகானுக்கு வாய்ப்பில்லை.. மத்தியப் பிரதேச பாஜக முதல்வராக மோகன் யாதவ் தேர்வு

Dec 11, 2023,05:31 PM IST

 போபால்: மூத்த தலைவரும், தற்போதைய முதல்வருமான சிவராஜ் சிங் சவுகானின் மீண்டும் முதல்வராகும் கனவு தகர்ந்துள்ளது. புதிய முதல்வராக மோகன் யாதவை பாஜக எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்துள்ளனர்.


மத்தியப் பிரதேச பாஜகவில் முக்கியத் தலைவராக வலம் வந்தவர் சிவராஜ் சிங் சவுகான். 4 முறை அங்கு முதல்வராக  இருந்துள்ளார். தொடர்ந்து அவரே முதல்வராக இருந்து வந்த நிலையில் தற்போது அங்கு முதல்வரை மாற்றியுள்ளது பாஜக.


சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது. இதையடுத்து முதல்வர் பதவிக்கு மீண்டும் சவுகானே போட்டியிட்டார். ஆனால் அவருக்கு கட்சிக்குள் கடும் போட்டி காணப்பட்டது. கட்சித் தலைமையும் கூட புதிய தலைமுறைக்கு முதல்வர் பதவியைத் தர விரும்பியது. ஆனால் சவுகான் போட்டியிலிருந்து விலகாததால் இழுபறி நிலை நிலவியது.




இந்த நிலையில் இன்று போபாலில் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். சவுகான் ஆட்சியில் அவர் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தார். உஜ்ஜைனி தொகுதியிலிருந்து 3 முறை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மோகன் யாதவ்.


மோகன் யாதவ் தேர்வைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச முதல்வர் பதவியில் இருந்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. அடுத்து ராஜஸ்தான் மாநில முதல்வரை மட்டும் பாஜக தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. நேற்றுதான் சத்திஸ்கர் மாநில முதல்வர் பதவிக்கான இழுபறி முடிவுக்கு வந்தது என்பது நினைவிருக்கலாம்.


சமீபத்திய செய்திகள்

news

2026ல் சட்டமன்ற தேர்தல்.. நாலே கூட்டணிதான்.. விறுவிறுப்பாகும் கட்சிகள்.. பரபரக்கும் அரசியல் களம்!

news

தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு.. வானகரம் விழாவில் அறிவிப்பு!

news

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன்.. அமைச்சர் பொன்முடி!

news

என்னை யாரும் சந்திக்க வர வேண்டாம்... டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

அதிமுக கூட்டணி அறிவிப்பு.. முதல்வர் மனதில் இடிபோல இறங்கியுள்ளது.. எடப்பாடி பழனிச்சாமி

news

தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருப்பதால்.. கூட்டணி குறித்து யோசித்து முடிவு எடுப்போம்.. பிரேமலதா

news

பாஜக திமுக மறைமுக கூட்டணி அம்பலமாகிவிட்டது.. தவெக தலைவர் விஜய்

news

அதிமுக- பாஜக கூட்டணி.. தோல்வி கூட்டணி.. முதல்வர் மு.க ஸ்டாலின் கடும் விமர்சனம்!

news

பொன்முடி பேச்சு.. ஏப்., 16ம் தேதி அதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிச்சாமி!

அதிகம் பார்க்கும் செய்திகள்