மலையாள இலக்கிய உலகின் பிதாமகர்.. எழுத்தையே சுவாசித்தவர்.. மறக்க முடியாத எம்.டி. வாசுதேவன் நாயர்

Dec 26, 2024,01:19 PM IST

கொச்சி:   கேரளாவின் புகழ்பெற்ற எழுத்தாளரான எம்.டி வாசுதேவன் நாயர், தனது 91வது வயதில் மூச்சுத் திணறல் காரணமாக காலமானார். அவரது மறைவால் மலையாள இலக்கிய உலகம் ஆகச் சிறந்த ஒரு ஆளுமையை இழந்துள்ளது.


மலையாளத் திரையுலகில் சிறந்த எழுத்தாளராக புகழ்பெற்றவர் எம் டி வாசுதேவன். எழுத்தாளராக மட்டுமல்லாமல், திரைக்கதை ஆசிரியராகவும், இயக்குநராகவும் திகழ்ந்தவர். சிறுவயதிலேயே மாத்ருபூமி வார இதழில் எழுத ஆரம்பித்து பின்னர் கல்லூரி பருவத்தில் ரத்தம் புரண்ட மாத்ருகள் என்ற சிறுகதையை வெளியிட்டார். இதனை தொடர்ந்து உலக சிறுகதை வருடத்தை முன்னிட்டு  மாத்ருபூமி வார இதழ் நடத்திய போட்டியில் இவரது வளர்த்துமிருகங்ஙள் என்ற சிறுகதை பரிசு பெற்றதுடன் பாராட்டையும் பெற்றது. அதேபோல் இவர் எழுதிய சிறுகதைகள் மற்றும் நாவல்களுக்காக சாகித்ய அக்காதமி விருது, ஞானபீட விருது, பத்ம விபூசண் விருது பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.


மலையாளத் திரையுலகில் 50-க்கும் மேற்பட்ட திரைக்கதைகளை எழுதியுள்ளார். இவரின்  நிர்மால்யம் என்ற முதல் படமே குடியரசுத் தலைவரின் விருது பெற்றது. சமீபத்தில்கூட இவரது கதைகளைக் கொண்டு உருவாக்ககப்பட்ட மனோரதங்கள் என்ற பெயரிலான வெப் தொடர் மிகப் பெரிய வரவேற்றைப் பெற்றது. இவரது எழுத்துக்களை வாசிக்க தீராக் காதலுடன் ஏகப்பட்ட ரசிகர்கள் காத்துக் கிடக்கிறார்கள். அப்படி ஒரு ஆளுமையான எழுத்தாளர் இவர்.




91 வயதான எழுத்தாளர் எம் டி வாசுதேவன் நாயர் இதய கோளாறு காரணமாக கோழிக்கோடு பேபி மெமோரியல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். ‌ இவரின் மறைவுக்கு மலையாளத் திரையுலகமும், பல்வேறு முக்கிய தலைவர்களும், திரைப் பிரபலங்களும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். 


பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மலையாள சினிமா மற்றும் இலக்கியத்தில் மிகவும் மதிக்கப்படும் நபர்களில் ஒருவரான எம்.டி.வாசுதேவன் நாயரின் மறைவு வருத்தமளிக்கிறது. அவரது படைப்புகள், மனித உணர்வுகளின் ஆழமான ஆய்வுடன் தலைமுறைகளை வடிவமைத்துள்ளன. மேலும் பலருக்கு ஊக்கமளித்துள்ளது. அமைதியானவர்களுக்கும் ஒதுக்கப்பட்டவர்களுக்கும் குரல் கொடுத்தவர் அவரது குடும்பத்தினருக்கும் :ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் .ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.


கமல்ஹாசன் இரங்கல்


நடிகர் கமல்ஹாசனும் எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் மலையாளத்தில் நடித்த முதல் படமான கன்யாகுமரி இவரது கதைதான். கமல்ஹாசன் எழுதியுள்ள இரங்கல் குறிப்பு:


ஒரு மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம்.  மலையாள இலக்கிய உலகின் மிகப்பெரும் ஆளுமை எம்.டி.வாசுதேவன் நாயர் நம்மைவிட்டுப் பிரிந்திருக்கிறார். 


மலையாளத் திரை உலகுக்கு நான் அறிமுகமான ‘கன்யாகுமரி’ படத்தின் படைப்பாளராக அவருடன் நான் கொண்ட சிநேகத்துக்கு இப்போது ஐம்பது வயது. கடைசியாக, சமீபத்தில் வெளியான ‘மனோரதங்கள்’ வரை அந்த நட்பு தொடர்ந்தது.


மகத்தான நாவல்களை மலையாள இலக்கிய உலகுக்குக் கொடையாகக் கொடுத்ததோடு, வெற்றிகரமான திரைக்கதாசிரியராகவும் திகழ்ந்தவர். பத்திரிகைத் துறையிலும் தன் தடத்தை ஆழமாகப் பதித்த அவரது மறைவு திகைப்பையும் வேதனையையும் ஒருங்கே ஏற்படுத்துகிறது. 


எழுத்தின் எல்லா வடிவங்களிலும் தனக்கான தனித்துவத்தோடு பங்களித்த, ஆளுமை மிக்க ஒரு மனம் ஓய்வு பெற்றிருக்கிறது. இது பேரிழப்பு. தென்னிந்திய இலக்கிய வாசகர்களையும் கலா ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தக்கூடியது.


மாபெரும் எழுத்துக் கலைஞனுக்கு என் இருதயப்பூர்வமான அஞ்சலி என்று அவர் தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்