சென்னை: வங்க கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால் தமிழகத்தில் மே 23 வரை கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை மழை கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வருகிறது. இதற்கிடையே அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழையும் முன்கூட்டியே தொடங்கியுள்ளது. இதனால் அநேக இடங்களில் கன முதல் மிக கனமழை வரை மழை கொட்டி தீர்த்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தென்மேற்கு வங்கக் கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு நோக்கி நகர்ந்து மே 24ஆம் தேதி காலை தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் .இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் மே 23 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என கூறியுள்ளது. வங்ககடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் மே 23ஆம் தேதிக்குள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது
5 நாட்களுக்கு கன மழை பெய்யும்
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாம். குறிப்பாக இன்றும், நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த மூன்று நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இன்று மிக கனமழை:
நீலகிரி, கோவை திண்டுக்கல், திருப்பூர், தேனி, புதுக்கோட்டை, தஞ்சை, ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று கனமழை:
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர்,மதுரை, சிவகங்கை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (மே 21) மிக கன மழை:
கன்னியாகுமரி, மதுரை, நெல்லை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை திருவாரூர் நாகை மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் (மே 22) :
தேனி, தென்காசி நெல்லை கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 23 கனமழை:
கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நெல்லை, தென்காசி, தர்மபுரி, திருப்பத்தூர், ஆகிய ஆறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 24:
நீலகிரி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மே 24 ஆம் தேதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.
{{comments.comment}}