வங்கக் கடலில்.. உருவானது.. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. 23ம் தேதி டாணா புயலாக மாறும்!

Oct 21, 2024,05:57 PM IST

சென்னை:   வங்கக்கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது வருகிற 23ம் தேதி டாணா புயலாக மாறவுள்ளது.


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மேட்டூரில் அதிகபட்சமாக 14 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் ஆத்தூரில் 6 சென்டிமீட்டர், ஓமலூரில் 5.2 சென்டிமீட்டர், ஏற்காட்டில் 5 சென்டிமீட்டர், சேலத்தில் 2.2 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.




இதற்கிடையே அந்தமான் கடலில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என ஏற்கனவே வானிலை மையம் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. 


இந்த நிலையில் அந்தமான் வங்க கடலில் உருவான வளிமண்டல மேலெடுக்கு சுழற்சி இன்று அதிகாலை 5:30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும். இந்த புயல் வலுப்பெற்று வடமேற்கு திசையில் வடமேற்கு வங்க கடலில் ஒடிசா, மேற்கு வங்காளம் கடற்கரை பகுதிகளை நோக்கி நகரும்.  இது புயலாக மாறும்போது இதற்கு டாணா என்று பெயரிடப்படும். கத்தார் நாடு வைத்த பெயர் இது.


3 நாட்களுக்கு நமக்கு மழை


குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என்பதால் தமிழ்நாட்டிற்கு  மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இருப்பினும் சென்னை மற்றும் புறநகர்களில் நல்ல வெயில் அடித்து வருகிறது. அவ்வப்போது மோடமாகவும் இருக்கிறது.


சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 14 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு வென உயர்ந்து வருகிறது. தற்போது அணைக்கு நீர்வரத்து 15, 929 கன அடியிலிருந்து 18, 094 கனஅடியாக உயர்த்துள்ளது. தொடர் கன மழை காரணமாக தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.89 அடியாக அதிகரித்து உள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக‌ 3000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


தமிழ்நாட்டுக்கு பாதிப்பு வராது 


வங்கக்கடலில் உருவாகும் புயலால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நயினார் நாகேந்திரனை தனியாக சந்தித்தது ஏன்.. வதந்தி கிளப்பக் கூடாது.. எஸ்.பி. வேலுமணி ஆவேசம்!

news

வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?

news

Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!

news

தவெக மாநாட்டுக்கு நிலம் தந்த விவசாயிகள்.. விருந்து வைத்த விஜய்.. வாசலில் வரவேற்ற புஸ்ஸி ஆனந்த்!

news

Maharashtra poll results: உத்தவ், சரத் பவாருக்கு கெட் அவுட் சொன்ன ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார்!

news

தொடர் உயர்வில் தங்கம்... சவரன் ரூ.58,000த்தை கடந்தது.. திகைப்பில் மக்கள்

news

Wayanad: வயநாட்டில் கொடி நாட்டிய பிரியங்கா காந்தி.. 4வது தலைமுறையிலிருந்து மேலும் ஒரு எம்.பி

news

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி

news

சனாதன சக்திகளை ஓங்க விட்டு விடாதீர்கள்.. திரைத்துறையினருக்கு திருமாவளவன் கோரிக்கை

அதிகம் பார்க்கும் செய்திகள்