Kilambakkam: விரைவில் மலிவு விலை உணவகம்.. ஏடிஎம் மையங்கள் வருது.. அமைச்சர் சேகர்பாபு

Feb 05, 2024,10:57 AM IST

சென்னை: கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தில் மக்களுக்கு  பயன் தரும் வகையில் மலிவு விலை உணவகம் மற்றும்  ஏடிஎம் மையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் பிகே சேகர்பாபு தெரிவித்துள்ளார்.


சென்னையில் புறநகர் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மிகப்பெரிய கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டது. இதற்கு கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயரிடப்பட்டது. பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல பேருந்து நிலையத்தின்  கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சென்னை பெருநகர போக்குவரத்து குழுமம் அவ்வப்போது ஒவ்வொரு நடவடிக்கையாக எடுக்கப்பட்டு வருகிறது.




இந்த பேருந்து நிலையத்தில் மக்கள் பயன் பெறும் வகையில் பல நல்ல மாற்றங்களை தமிழக அரசு மற்றும் சிஎம்டிஏ ஆகியவை இணைந்து செயல்படுத்தி வருகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ரூ.14.30 கோடியில் புதிதாக கட்டப்பட உள்ள காவல் நிலையத்திற்கு அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.


பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக மலிவு விலை உணவகம் வெகு விரைவில் தரமான முறையில் அமைக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடை வைத்திருந்த 11 உரிமையாளர்களுக்கும் கிளாம்பாக்கத்தில் சலுகை விலையில் கடை ஒதுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அவர்களின் வாழ்வாதரத்திற்கு வழி செய்யப்பட்டுள்ளது.


கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அனைத்து பணிகளும் துரிதமாக செயல்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் திட்டமிடப்படாத திட்டங்களை இந்த ஆட்சியில் தான் திட்டமிட்டு பல பணிகளை செய்து வருகிறோம். முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலையம் கட்டும் பணிகள் ஏப்ரல் மாதத்தில் நிறைவு பெறும். பேருந்து நிலையத்தில் 35 நாட்களுக்குள் தேவையான 90 சதவீத அடிப்படை வசதியை செய்துள்ளோம். 


வெகு விரைவில் மக்களுக்கு பயன் தரும் வகையில் ஏடிஎம் மையங்கள் ஒன்று அல்ல 3, 4 அமைக்கப்படும். பல வங்கிகள் விருப்ப மனு அளித்துள்ளனர். அதை பரிசீலித்து நல்ல முறையில் பணி செய்பவர்களுக்கு ஏடிஎம் மையம் வைக்க அனுமதி அளிக்கப்படும் என்றார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்