தாமரைக் கண்கள்.. உணர்வுகளின் ஊர்வலம்.. கனவுகளில் காதல்!

Aug 30, 2023,12:27 PM IST
- தேவி

"என்னருகில் நீ இருக்கும் நொடியில்
தன்னிலை மறந்து வானில் பறக்கும் இறகு போல் சிலிர்க்கின்றேன்
என் எண்ணங்கள் உன் வார்த்தையாக வரும் போதும்
உன் மௌனங்களை உணர்ந்து 
எனது பாஷைகளும் ஊமை ஆகிறது"

காதல் தரும் உணர்வுகள் எப்போதுமே ஸ்பெஷல்தானே...!



காதலை ஒவ்வொருவரும் உணர  தான் செய்கிறார்கள். மனிதனுடைய செயல்கள், எண்ணங்கள் ,வாழ்விடம் வெவ்வேறாக இருப்பினும் அனைவருடைய காதல் உணர்வுகளும் பொதுவான ஒன்றாக தான் உள்ளது .அதை வெளிப்படுத்தும் விதம் வேறுபடுமேயன்றி அதன் அடி நாதம்.. இயல்பு மாறாது.  ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ தன்னுடையவள், தன்னுடையவன் என்ற உணர்வு ஏற்படுத்துவதும் காதலே. இதில் காதலின் நிலைப்பாடு என்பது அவரவர் வயதிற்கு ஏற்றார் போல் மாறுபடத்தான் செய்கிறது. 

கல்லூரி பருவத்தில் காதலிப்பவர்கள் தங்களுடைய மனதின் கலர் கலரான கனவுகளில் திளைத்துக் கொண்டுதான் இருப்பார்கள். தூரத்தில் இருக்கும் பார்வையின் தேடல்களை அழகாக வெளிப்படுத்துவார்கள். தன்னவளின் கூந்தல் பூவை மயில் இறகுகளைப் போன்று மறைத்து வைப்பதும், தன்னுடையவளின் பார்வையை பார்த்து நாணம் அடைவதும் என்று இளமை பருவத்தில் ஏற்படும் காதல் உணர்வுகளை மனக்கனவில் பெருக்கிக் கொண்டு தங்களுக்குள் ஒரு அழகான காதல் பூவை வளர்த்துக் கொண்டுதான் இருப்பார்கள். 

இளம் வயதினரின் காதல் இப்படியென்றால்.. திருமணமானவர்களின் காதல், விசித்திரமானது, அதுவரை தனக்காக வாழ்ந்த வாழ்க்கையை தன்னுடைய புதிய பந்ததிற்காக வாழ ஆரம்பிக்கிறார்கள். தனிமையில் அவனுடன் பேசிய வார்த்தைகளை நினைத்து இதழ்களில் நாணத்தைப் பூசிக்கொண்டு, அவனுடைய வருகையை எதிர்நோக்கி கொண்டு, அவனுடைய வருகையை அறிந்து "பனியில் வாடும் தாமரை மலர்கள் சூரியனைக் கண்டதும் உயிர்தெழுவதை போல் தோன்றும் உணர்வை கண்ணில் உறைய வைப்பாள் ". அவனும் வசந்த காற்று தன்னை நோக்கி வருவதைக் கண்டு பூங்காற்றுக்கு ஏங்கும் மொட்டுக்கள் எப்படி, காற்று பட்டதும், பட்டென மலர்கிறதோ அந்த உணர்வை உணர்ந்து தன்னவளின் தாமரை கண்களை காண துடிக்கின்றான்.



வயது முதிர்ந்த பிறகு வரும் காதல் என்பது அதிலும் மென்மையானதாகவும், வெட்டிவேர் போன்று நறுமணம் வீசுவது போலவும்இருக்கும். அவளது இமைகளின் சுருக்கங்களைக் கண்டு கண்ணாடிக்கு பதிலாக அவளது கண்களை பார்த்து தலைகோதிய நினைவுகளை நினைத்து மனம்  வருடி கொண்டே இருக்கும். நரை தோன்றிய பிறகும் கூட அவர்களின் காதல் மட்டும் இளமையை தன்னுள் கட்டிப்போட்டு வைத்துக் கொண்டே இருக்கும். அவ்வப்போது அவர்களின் முதல் சந்திப்பின் நினைவுகளை நினைத்து அவளின் கரங்களை பிடித்து "என்னை ஏற்றுக் கொள்வாயா" என்று கேட்ட நிமிடங்களை மனதில் திரையிட்டு தன்னவளுக்கு ஒளி திரையில் பரவ விட்டு உடல் சிலிர்த்துக் கொண்டே இருக்கும். 

காதல் உறவல்ல.. உணர்வு..  காதலுக்கு காலமும் இல்லை, வயதும் இல்லை, பல யுகங்களை தாண்டியும் காதல் வாழ்வதால் தான் மனிதன் மனதில் "மனிதம்" இறுகப்பற்றிக் கொண்டு, ஈரத்துடன் உயிர்த்திருக்கிறது. காலம் உள்ளவரை, அனைவரும் காதலிப்போம் .. உண்மையான காதலுடன்!

சமீபத்திய செய்திகள்

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

அதிகம் பார்க்கும் செய்திகள்